முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அதிரடி உத்தரவு...! மருந்து கடைகளில் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்...!

06:30 AM Dec 30, 2023 IST | 1newsnationuser2
Advertisement

குழந்தைகள் மத்தியில் போதைப் பொருட்கள் பயன்படுத்துதலையும், கடத்துதலையும் தடுக்கும் பொருட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

Advertisement

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகமும் இணைந்து குழந்தைகள் மத்தியில் போதைப் பொருட்கள் பயன்படுத்துதலையும், சட்டவிரோத போதைப் பொருட்கள் கடத்தலையும், தடுக்கும் விதமாக "கூட்டு செயல் திட்டம்" வெளியிட்டுள்ளனர்.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 'H', 'H1', மற்றும் 'X' அட்டவணை மருந்துகளை விற்பனை செய்யும் அனைத்து மருந்தகங்களின் உள்ளேயும், வெளியேயும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973, பிரிவு 133-ன் கீழ் மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அலுவலர்கள். மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது மேற்கண்ட உத்தரவினை பின்பற்றாததற்காக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளவும், மருந்தகங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிப்பதிவு செயல்பாடுகளை, மாவட்ட போதைப் பொருட்கள் தடுப்பு அதிகாரிகள் / குழந்தை நல காவல் அதிகாரிகள் அவ்வபோது சரிபார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
cameraDt collectorKancheepuram districtmedical shop
Advertisement
Next Article