ரீடிங் கண்ணாடிக்கு பதிலாக சந்தைக்கு வரும் கண் சொட்டு மருந்து..!! - தற்காலிக தடை விதித்த நிபுணர் குழு
இந்த நவீனக் காலத்தில் கண் கண்ணாடிகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் 40 வயதைக் கடந்தாலே ரீடிங் கண்ணாடிகள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இதற்கிடையே ரீடிங் கண்ணாடிகளை மொத்தமாக அகற்றக்கூடிய புதிய கண் சொட்டு மருந்துகளுக்கு இந்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் இப்போது ஒப்புதல் அளித்தது. மும்பையைச் சேர்ந்த என்டோட் பார்மாசூட்டிகல்ஸ் என்ற இந்த நிறுவனம் பிரஸ்போபியா சிகிச்சைக்காக பிரஸ்வியூ (PresVu) என்ற கண் சொட்டு மருந்துகளை உருவாக்கியுள்ளது..
பிரஸ்போபியா பாதிப்பால் உலகெங்கும் 180 கோடி பேர் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது சர்ச்சையை எழுப்பிய நிலையில், இந்த சொட்டு மருந்தை தயாரிக்க, சந்தைப்படுத்த மறு உத்தரவு வரும் வரை மத்திய மருந்துகள் நிபுணர் குழு (சிடிஎஸ்சிஓ) தடை விதித்துள்ளது. அதற்கான விளக்கத்தையும் சிடிஎஸ்சிஓ கொடுத்துள்ளது.. இந்த சொட்டு மருந்தை கண்ணில் ஊற்றினால் 15 நிமிடத்தில் வெள்ளெழுத்து பிரச்சினை சரியாகி விடும். அதன்பின் ரீடிங் கிளாஸ் இன்றி பேப்பர் படிக்கலாம் என தெரிவித்தது. இது சர்ச்சைக்கு வித்திட்டது.
இந்த சொட்டு மருந்துக்கு சிடிஎஸ்சிஓ ஏற்கெனவே அனுமதி வழங்கி இருந்தது. இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளரின் (டிசிஜிஐ) அனுமதியும் தொடர்ந்து பெறப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் சிடிஎஸ்சிஓ அனுமதியை ரத்து செய்துள்ளது. மறு உத்தரவு வரும் வரையில் சம்பந்தப்பட்ட மருந்தை மருந்து நிறுவனம் தயாரிக்க கூடாது என தெரிவித்துள்ளது.
கடந்த 4-ம் தேதி இந்த சொட்டு மருந்து குறித்து என்டாட் பார்மாடிகல்ஸ் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தது. இது மக்கள் மத்தியில் அதீத கவனம் பெற்றது. அதே நேரத்தில் இதில் பயன்படுத்தப்பட்ட Pilocarpine என்ற மருந்து பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என கண் மருத்துவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more ; 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் சாம்சங்.. பீதியில் ஊழியர்கள்..!!