முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வாகன ஓட்டிகளே..!! டிரைவிங் லைசென்ஸை இனி இவ்வளவு ஈசியா வாங்கலாமா..? ஆன்லைனில் உடனே அப்ளை பண்ணுங்க..!!

In order to provide services to the public through online, the Tamil Nadu government had issued a notification regarding the purchase of driving license using Aadhaar card.
01:17 PM Nov 09, 2024 IST | Chella
Advertisement

ஆன்லைன் மூலமாக பொதுமக்களுக்கு சேவைகள் வழங்கும் வகையில், ஆதார் அட்டையை பயன்படுத்தி ஓட்டுநர் உரிமம் வாங்கி கொள்வது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது. வாகன பதிவு தொடர்பான 42 சேவைகளை பொதுமக்கள் ஆன்லைன் மூலமாகவே பெறலாம் என்று அறிவிப்பு வெளியானாலும் கூட, டிரைவிங் லைசென்ஸை வீட்டிலிருந்தபடியே பெற்றுக்கொள்ளும் அறிவிப்பானது மக்களை ஈர்த்திருந்தது.

Advertisement

அதாவது, 2022-23ஆம் ஆண்டில் (பிப்ரவரி 2023 வரை) மட்டும் 6.61 லட்சம் புதிய டிரைவிங் லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆதாரை ஆவணமாக வைத்து, விண்ணப்பதாரர்கள் தங்கள் வீட்டிலிருந்தோ அல்லது விருப்பமான இடத்திலிருந்தோ பழகுநர் உரிமம் (LLr) தேர்வினை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குச் செல்லாமலே மேற்கொள்ளலாம்.

40 வயதிற்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள், மருத்துவரிடம் மருத்துவ சான்றிதழைப் பெற்று உரிய ஆவணங்களை பதிவேற்றலாம். ஆதார் இல்லாத விண்ணப்பதாரர், ஆவணச் சரிபார்ப்பு மற்றும் பழகுநர் உரிமம் (LLr) தேர்வுக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும். பழகுநர் உரிமத்தை பெற்ற பிறகு, ஒரு விண்ணப்பதாரர் நிரந்தர ஓட்டுநர் உரிமத்திற்கு 30 நாட்களுக்குப் பிறகு https://sarathi.parivahan.gov.in/sarathiservices/state என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத் தேர்வுக்கு https://sarathi.parivahan.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி..?

* முதலில், https://parivahan.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

* அதில், "ஓட்டுநர் உரிமம் தொடர்பான சேவைகள்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

* பிறகு, உங்கள் மாநிலம் மற்றும் 'உரிமச் சேவைகள்' என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

* DL-ன் புதுப்பித்தல் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் விவரங்களை பதிவிட்டு "ஆம்" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

* அதில், கேட்கப்படும் விவரங்களை உள்ளிட்டு CAPTCHA குறியீட்டை கொடுத்து சமர்ப்பிக்க வேண்டும்.

* அடுத்து, உங்கள் விண்ணப்பத்திற்கான ஒப்புகை சீட்டு கொடுக்கப்படும். பிறகு, உங்கள் வாகன ஓட்டுநர் உரிமத்தை அப்டேட் செய்வதற்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, பழைய DL-ஐ பதிவேற்ற வேண்டும்.

* பிறகு, கட்டணம் செலுத்துவதற்கான வழிமுறைகள் செயல்படுத்தப்படும். கட்டணம் செலுத்திய பிறகு அதன் ரசீதை, பத்திரமாக பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

* இப்போது, அடுத்த சில நாட்களில் புது Driving Licence நீங்கள் பதிவிட்ட முகவரியில் தபால் மூலம் வீட்டிற்கு வந்து சேரும்.

Read More : ”எங்க வந்து யார்கிட்ட சீன் போடுற”..!! கள்ளக்காதலிக்காக காவல்நிலையத்தில் அட்ராசிட்டி செய்த காவலர்..!! தட்டித் தூக்கிய போலீஸ்..!!

Tags :
ஆதார் அட்டைஆர்டிஓ அலுவலகம்ஆன்லைன்டிரைவிங் லைசென்ஸ்போக்குவரத்துத்துறை
Advertisement
Next Article