முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இனி ஆர்டிஓ அலுவலகங்களில் 'Driving Licence’ கிடைக்காது..!! எங்கு வாங்க வேண்டும்..? வெளியான அறிவிப்பு..!!

07:19 AM Feb 29, 2024 IST | 1newsnationuser6
Advertisement

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்.டி.ஓ.,) பெறப்படும் ஓட்டுனர் உரிமம் இனி விண்ணப்பதாரரின் வீடுகளுக்கே வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமம் பெற ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதில் குறிப்பிடும் நாள், நேரத்தில் அங்கு சென்று முதலில் ஓட்டுனர் பழகுநர் உரிமம் (எல்.எல்.ஆர்.,) அடுத்து ஒரு மாத இடைவெளிக்குப்பின் ஓட்டுனர் உரிமம் பெறலாம். காலையில் வாகன ஆய்வாளர் முன்பு வாகனத்தை ஓட்டிக் காட்டி, போட்டோ எடுத்துக் கொண்ட பின்னர், மாலையில் ஓட்டுனர் உரிமத்தை நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். இதுவே தற்போதைய நடைமுறையாகும்.

ஆனால், தற்போது இனி ஓட்டுனர் உரிமம் விண்ணப்பதாரரின் வீடுகளுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படும். இந்த வசதி நடைமுறைக்கு வந்தது. இதனால் விண்ணப்பதாரர் ஒருமுறை சென்று ஓட்டிக் காட்டி தேர்ச்சி அறிவித்த பின், ஓட்டுனர் உரிமம் பெற என அலையத் தேவையில்லை. இதற்காக வழக்கமான ஓட்டுனர் உரிம கட்டணமான ரூ.520 உடன், தபால் செலவுக்காக ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். இதே நடைமுறையில் ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் உரிமம், பதிவுச் சான்றிதழும் (ஆர்.சி., புக்) தபால் மூலமே வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பத்தில் குறிப்பிடும் முகவரி தவறாக இருந்தாலோ, விண்ணப்பதாரர் வீட்டில் இல்லையென்றாலோ ஓட்டுனர் உரிமம் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கே திரும்பி விடும். இந்நிலையில், விண்ணப்பதாரர் அதனைப் பெற அலுவலகத்திற்கு சென்று சரியான சுயவிலாசம் எழுதிய தபால் உறையை அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அதனை மீண்டும் வீட்டு முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : Driving licence is now looking for a home

Read More : BJP | ‘திமுகவின் கூடாரத்தை கலைத்தே ஆக வேண்டும்’..!! அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு..!!

Advertisement
Next Article