வாகன ஓட்டிகளே..!! இனி ஒரு நாளைக்கு ரூ.200-க்கு மட்டுமே பெட்ரோல் போட முடியும்..!! ஆட்டோவுக்கு ரூ.400, காருக்கு எவ்வளவு..?
திரிபுரா மாநிலத்தில் உள்ள லுண்டிங் மற்றும் பர்தாபூர் ஆகிய பகுதிகளுக்கு இடையே சில நாட்களுக்கு முன்னர் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டது. இதன் காரணமாக தற்போது அந்த மாநிலத்திற்குள் ரயில் எதுவும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திரிபுரா மாநிலத்திற்கு தேவையான பெட்ரோல் எல்லாம் ரயில் மூலம் தான் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், சரக்கு ரயில் தடம் புரண்டதால் தற்போது பெட்ரோலை நம் மாநிலத்திற்கு அனுப்பி வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இருப்பில் இருக்கும் பெட்ரோல் தான் மாநில அரசு பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டியுள்ளது. ரயில்வே தண்டவாள பிரச்சனை சரியாகும் வரை இந்த கட்டுப்பாடு நிலவும் என கூறப்படுகிறது.
இதன் காரணமாக தற்போது திரிபுரா மாநில அரசு தற்காலிக பெட்ரோல் விநியோக ரேஷன் முறையை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட வாகனங்கள் குறிப்பிட்ட அளவிலான பெட்ரோல் மட்டுமே தினந்தோறும் பயன்படுத்த முடியும். அந்த வகையில், டூவீலர் வாகன ஓட்டிகள் ஒரு நாளுக்கு ரூ.200 மதிப்பிலான பெட்ரோல் மட்டுமே வாங்க முடியும். ஆட்டோ ஓட்டுநர்கள் ரூபாய் 400 மதிப்பிலான பெட்ரோலை மட்டுமே வாங்க முடியும். கார் ஓட்டுநர்கள் ஒரு நாளுக்கு ரூபாய் 1,000 மதிப்பிலான பெட்ரோல் மட்டுமே வாங்க முடியும். பெட்ரோல் தட்டுப்பாடு சரியாகும் வரை இந்த ரேஷன் முறை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த கட்டுப்பாடுகள் அரசு வாகனங்களுக்கோ அவசர சேவைக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கோ பொருந்தாது. அவர்கள் எப்பொழுதும் போல அவர்களுக்கான தேவையான எரிபொருளை வாங்கிக் கொள்ளலாம். தனிநபர் வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்தில் குறிப்பிட்ட வாகனங்களுக்கு மட்டுமே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.