வாகன ஓட்டிகளே..!! இன்று முதல் கட்டணம் உயர்வு..!! மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு..!!
இன்று முதல் சென்னையில் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
இதுநாள் வரை சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிக்காமல் வாகனத்தை பார்க்கிங் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு 6 மணி நேரத்திற்கு ரூ.20ம், 12 மணி நேரத்திற்கு ரூ.30ம், 12 மணி நேரத்திற்கு மேல் ரூ.40ம், சேவை நேரத்தை கடந்தால் ரூ.50ம் கட்டணமாக செலுத்தி வந்தவர்கள், இனி புதிய கட்டண விகிதங்களின் படி இந்த கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 4 சக்கர வாகனங்களை நிறுத்துவோர்களிடம் 6 மணி நேரத்திற்கு 30 ரூபாயும், 12 மணி நேரத்திற்கு 40 ரூபாயும், 12 மணி நேரத்திற்கு மேல் 50 ரூபாயும், சேவை நேரத்தை கடந்தால் 100 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெட்ரோவின் பயணம் செய்யும் பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களின் பயன்பாட்டின் அடிப்படையில் மாற்றங்களை செய்துள்ளது. கடந்த 30 நாட்களில் குறைந்தது 15 பயணங்கள் செய்த மெட்ரோ பயணிகளுக்கு மாதாந்திர பாஸ் வசதி விம்கோ நகர் பணிமனை, ஸ்ரீ தியாகராய கல்லூரி, நேரு பூங்கா, கோயம்பேடு, அசோக் நகர் மற்றும் ஆலத்தூர் மெட்ரோ ஆகிய 6 மெட்ரோ ரயில் நிலையங்களில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதிய வண்ணாரப்பேட்டை, நந்தனம், எழும்பூர் மற்றும் செனாய் நகர் மெட்ரோ ஆகிய 4 மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தும் இட வசதி இல்லாததால், மாதாந்திர பாஸ் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்களில் பயணிக்காமல் வாகன நிறுத்தும் வசதியை மட்டும் பயன்படுத்துபவர்களின் தேவை அதிகரித்துள்ளதால் திருவொற்றியூர், திருவொற்றியூர் தேரடி, காலடிப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, மண்ணடி, உயர்நீதிமன்றம், அரசினர் தோட்டம், எல்.ஐ.சி, நந்தனம், கிண்டி உள்ளிட்ட 18 மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ பயணிகள் அல்லாதவர்களின் வாகன நிறுத்தும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 30 நாட்களில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாதவர்கள் அல்லது 15-க்கும் குறைவான பயணம் செய்பவர்களுக்கு அரும்பாக்கம் மெட்ரோ மற்றும் பரங்கி மலை மெட்ரோ ரயில் நிலையங்களில் மாதாந்திர வாகன நிறுத்தும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மீதமுள்ள மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தும் கட்டணத்தில் எவ்வித மாற்றம் இல்லை. மேலும், மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் கட்டணம் தொடர்பான விவரங்களுக்கு https://chennaimetrorail.org/parking-tariff/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
Read More : ரஜினியின் ’கூலி’ படத்திற்கு செக் வைத்த இளையராஜா..!! உடனே நீக்குங்கள்..!! நோட்டீஸ் அனுப்பியதால் பரபரப்பு..!!