வாகன ஓட்டிகளே..!! மறந்துறாதீங்க..!! போலீசிடம் சிக்கினால் என்ன ஆகும் தெரியுமா..?
பெங்களூருவில் HSRP நம்பர் பிளேட் எனப்படும் உயர்-பாதுகாப்பு பதிவுத் தகடுகளை நிறுவுவதற்கான காலக்கெடு செப்டம்பர் 15 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. HSRP இல்லாத வாகனங்களுக்கு 500 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 2 கோடிக்கும் அதிகமான வாகனங்களில், 52 லட்சம் வாகனங்களில் மட்டுமே எச்.எஸ்.ஆர்.பி நம்பர் பிளேட்டை பயன்படுத்துவதாக கர்நாடக அரசு தெரிவித்திருக்கிறது. முதல் முறை 500 ரூபாய் அபராதமும், மீண்டும் மீண்டும் அதே தவறை செய்தால் 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், ஏப்ரல் 1, 2019-க்கு முன் விற்கப்பட்ட வாகனங்களில் கட்டாயமாக உயர் பாதுகாப்புப் பதிவுத் தட்டு (HSRP) பிளேட்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது விதியாகும். எச்எஸ்ஆர்பி இல்லாமல் இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால், கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்பதே தமிழ்நாடு உட்பட இந்தியா முழுக்க விதி. அதாவது, ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரையில் அபராதம் விதிக்கப்படும்.
HSRP நம்பர் பிளேட் என்பது எரிபொருள் வகையைக் குறிக்கும் வண்ண-குறியிடப்பட்ட லேபிளுடன் உள்ளது. நம்பர் பிளேட்டுக்கு எளிதாக ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். இந்த நம்பர் பிளேட்டுகளில் 3டி ஹாலோகிராம், ரிப்ளக்டிவ் ஃபிலிம், ஹலோ கிராம்மில் எழுதப்பட்ட 'இந்தியா' என்ற பெயர் மற்றும் லேசர் மூலம் பொறிக்கப்பட்ட வரிசை எண் போன்ற சிறப்பு அம்சங்கள் இருக்கும். ஜூலை 2022 அன்று அல்லது அதற்குப் பிறகு விற்கப்படும் வாகனங்கள் இப்போது தானாக HSRP வகை எண் பிளேட்டுகளுடன் வருகின்றன.
ஆனால், கர்நாடகா போன்ற பல மாநிலங்கள் இப்போது செப்.15, 2024-க்கு முன் பழைய வாகனங்களின் நம்பர் பிளேட்களை HSRP வகையில் மாற்ற வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளன. வாகனத்தின் வகையைப் பொறுத்து 500 முதல் 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க வேண்டும் என்று கர்நாடகாவில் உத்தரவிடப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு எண் தகடு கோரி ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.
படி 1: https://bookmyhsrp.com/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH# ஐ பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
படி 2: 'கலர் ஸ்டிக்கர் கொண்ட உயர் பாதுகாப்பு பதிவுத் தட்டு' என்பதை HSRPல் தேர்ந்தெடுக்க வேண்டும்.
படி 3: அடுத்து, என்ஜின் எண், சேஸ் எண், பதிவு எண், வாகனப் பதிவு நிலை மற்றும் கேப்ட்சா ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
படி 4: 'இங்கே கிளிக் செய்யவும்' என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
படி 5: உங்களுக்கு அருகில் உள்ள இடத்தைத் தேர்ந்தெடுத்து, அப்பாயிண்ட்மெண்ட் ஸ்லாட்டை முன்பதிவு செய்ய வேண்டும்.
படி 6: அடுத்த பக்கத்தில், கட்டணம் செலுத்த வேண்டும்.
படி 7: சரிபார்ப்பிற்காக ரசீது நகல் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும்.
தற்போது உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், ஒடிசா, இமாச்சல், டெல்லி, டாமன் மற்றும் டையூ மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் எச்எஸ்ஆர்பி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பிற மாநிலங்களில் வசிக்கும் நபர்கள், அருகிலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு (RTO) சென்று விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில் இந்த நம்பர் பிளேட்டுகளை பெற RTO அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்.
Read More : புரட்டாசியில் வரும் இந்த நாளை மட்டும் மறந்துறாதீங்க..!! ஏராளமான நன்மைகள் கிடைக்கும்..!!