For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வாகன ஓட்டிகளே உஷார்..!! பெட்ரோல் நிரப்பும்போது செல்போன் பயன்படுத்தினால் இப்படித்தான்..!! அதிர்ச்சி வீடியோ..!!

A video of a fire incident when a driver was using a cell phone while filling petrol at a petrol station is going viral on social media.
11:16 AM Jun 13, 2024 IST | Chella
வாகன ஓட்டிகளே உஷார்     பெட்ரோல் நிரப்பும்போது செல்போன் பயன்படுத்தினால் இப்படித்தான்     அதிர்ச்சி வீடியோ
Advertisement

பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிய போது, வாகன ஓட்டி செல்போன் பயன்படுத்தியதால் தீ விபத்து ஏற்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் நெடுஞ்சாலையில் ஒரு பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பியபோது, இருசக்கர வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்தது. இதுதொடர்பான சிசிடிவி காட்சியில், இருசக்கர வாகன ஓட்டி, பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருக்கும்போது தனது மொபைல் போனை எடுத்துப் பார்க்கிறார். அப்போது, திடீரென பெட்ரோல் டேங்கில் தீப்பிடித்தது. இதனால் வாகன ஓட்டி அலறியபடி வாகனத்தை பம்ப் அருகில் இருந்து நகர்த்திச் சென்றார்.

இதனையறிந்த பெட்ரோல் நிலைய ஊழியர் விரைந்து செயல்பட்டு தீ அணைக்கும் கருவியைப் பயன்படுத்தி தீயை அணைத்தார். ஊழியரின் செயல்பாடு காரணமாக இருவரும் காயமின்றி உயிர் தப்பினர். அனைத்து எரிபொருள் நிலைய வளாகங்களிலும் வாகன ஓட்டிகள், வருகையாளர்கள், மொபைல் போனைப் பயன்படுத்தவோ அல்லது சிகரெட் புகைக்கவோ கூடாது என்ற எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருக்கும். இதனை மீறும்பட்சத்தில் அது தீ விபத்து ஏற்படுகிறது. எனினும் பெட்ரோல் நிலையங்களில் 'கியூ ஆர் கோட்' ஸ்கேன் செய்வதற்கு செல்போனை பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை நடைமுறையில் உள்ளது. எனவே, இது முரண்பாடாக உள்ளது எனவும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Read More : பெண்களே உஷார்..!! இன்ஸ்டா நட்பால் இப்படியும் நடக்கும்..!! குளிர்பானத்தில் மாத்திரை..!! நடந்தது என்ன..?

Tags :
Advertisement