வாகன ஓட்டிகளே..!! அமலுக்கு வந்த 3 முக்கிய விதிமுறைகள்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!
தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து தொடர்பாக முக்கியமான 3 விதிகள் கடந்த சில வாரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதாவது, இனி புதிய கார்கள் மற்றும் பைக்குகள் வாங்கும் போது நிரந்தர நம்பர்கள் வழங்கும் வரை தற்காலிக நம்பர்கள் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. தற்காலிக நம்பர்கள் இல்லாமல் கார்களை வெளியே கொண்டு வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த தற்காலிக எண்ணை தெளிவாகக் காட்ட வேண்டும். மஞ்சள் பின்னணியில் சிவப்பு எண்களை வைத்திருப்பதே சரியான வழி. ஆனால், பல புதிய கார்களில் வெறுமனே மஞ்சள் காகிதம் அல்லது சிவப்பு எண்கள் கொண்ட ஸ்டிக்கர் உள்ளது. இது விதிகளைப் பின்பற்றவில்லை. இவை முறையாக நம்பர் பிளேட் வடிவத்தில் இருக்க வேண்டும். மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி காரின் முன்பக்கத்திலும், பின்புறத்திலும் தற்காலிக எண்ணைக் காட்ட வேண்டும்.
அடுத்ததாக, இனி லைசன்ஸ் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலம் வழங்க போவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதன்படி ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தி வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே ஆன்லைன் மூலம் பணிகளை மேற்கொள்ள முடியுமாம். இதனைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்துத்துறையில் அனைத்து ஊழியர்களும் கணினி பயன்படுத்தும் வகையில் கொடுத்தால் கணினிகள் வழங்கப்படும்.
அடுத்ததாக, 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளித்தால், அந்த வாகனத்தின் பதிவை நிறுத்தி வைப்போம் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கையில், 18- வயதுக்குட்பட்டவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி தரும் எண்ணத்தில் உள்ள பெற்றோர்களா நீங்கள்? 18-வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளிக்கும் பெற்றோருக்கு தண்டனை உறுதி. 12 மாதங்களுக்கு வாகன பதிவு நிறுத்தி வைக்கப்படும். கவனம் தேவை பெற்றோர்களே என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
Read More : இந்த காய்கறிகளை மட்டும் சமைக்காமல் பச்சையாக சாப்பிடாதீங்க..!! என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா..?