பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடித்தால் புற்றுநோய் ஏற்படும்!. ஆஸ்திரிய ஆய்வில் அதிர்ச்சி!
Plastic Bottle: பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆஸ்திரிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரியாவில் உள்ள டான்யூப் தனியார் பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு மேற்கொண்ட ஆய்வில், 'பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களில் இருந்து தண்ணீர் மற்றும் பிற பானங்களை உட்கொள்வதை நிறுத்திவிட்டு, 2 வாரங்களுக்கு குழாய் தண்ணீரை மட்டுமே நேரடியாக குடித்தபோது இரத்த அழுத்தம் கணிசமாகக் குறைந்துள்ளது' என்பது கண்டறியப்பட்டது. ஆய்வின் முடிவுகள், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்று தெரிகிறது.
மனிதர்கள் ஒவ்வொரு வாரமும் 5 கிராம் மைக்ரோபிளாஸ்டிக் அளவை பயன்படுத்துகிறார்கள் என்று விஞ்ஞானிகள் முன்பே கண்டறிந்தனர். மேலும், கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்பட்ட திரவங்களிலும் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் முழுமையான ஆராய்ச்சிக்குப் பிறகு, பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதன் அடிப்படையில், குழாய் நீரை கொதிக்கவைத்து, வடிகட்டுவது மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதை கிட்டத்தட்ட 90% குறைக்கலாம் என்று தனி ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது.
Readmore: பரஸ்பர விவாகரத்து!. கட்டாய காத்திருப்பு அவசியமில்லை!. நீதிமன்றம் அதிரடி!