முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்த டீ குடிப்பதால் இவ்வளவு ஆபத்தா..? மக்களே கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Boiling milk tea for a long time can have adverse health effects.
05:10 AM Jun 29, 2024 IST | Chella
Advertisement

பால் டீயை விரும்பி குடிப்போர் நம்மில் பலர் உண்டு. ஒரு நாளைக்கு பலமுறை அதை குடிப்பார்கள். மன அழுத்தத்தில் இருந்து விடுபட இது உங்களுக்கு கை கொடுக்கும். ஆனால், இது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா..? அது என்னவென்றால், பால் டீயை நீண்ட நேரம் கொதிக்க வைத்து குடித்தால் அது ஆரோக்கியத்திற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்துமாம்.

Advertisement

ஊட்டச்சத்து இழப்பு: பால் டீயை அதிக நேரம் கொதிக்க வைத்தால் அதன் ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடும். ஏனெனில், பாலில் கால்சியம், புரத மற்றும் வைட்டமின் டி போன்ற அத்தியாவாசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பாலை அதிக நேரம் கொதிக்க வைத்தால் இதனை இழக்க நேரிடும்.

தன்மையை இழக்கும்: பால் டீயை அதிகமாக கொதிக்க வைக்கும் போது அது தன்மையை இழந்து புரதத்தை உறைய வைக்கிறது. இது பொருந்தாத அல்லது தயிர் வடிவத்தை குறிக்கிறது. இன்னும் சொல்ல போனால் பால் டீயின் மென்மையான நிலைத்தன்மைக்கு பதிலாக, பார்ப்பதற்கு விரும்பத்தகாதவையாக இருக்கும்.

செரிமான பிரச்சனைகள்: அதிகம் கொதிக்க வைத்த பால்டியை குடிப்பது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஏனென்றால், அது கொதிக்கும்போது, அதன் புரத கட்டமைப்பை மாற்றுகிறது. இதனால் அதைக் குடித்த பிறகு ஜீரணிக்க கடினமாகிறது. இது வாயு வீக்கம் மற்றும் வயிறு அசெளகரியம் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

சுவை மாறும்: பால் டீயை அதிக நேரம் கொதிக்க வைத்தால் அதன் சுவை மாறிவிடும். உதாரணமாக, கசப்பான அல்லது விரும்பத்தகாத சுவையை கொடுக்கும். சொல்ல போனால், இது டீயின் உண்மையான சுவையை கெடுத்துவிடும்.

Read More : மாதந்தோறும் ரூ.12 ஆயிரத்துக்கும் மேல் வருமானம்..!! இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Tags :
milk teamilk tea diytea
Advertisement
Next Article