ஜில்லுன்னு ஐஸ் வாட்டர் குடிப்பவரா நீங்கள்.? அதனால் ஏற்படும் தீமைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.!
மனித உடலுக்கு தண்ணீர் மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து லிட்டர்கள் தண்ணீர் அருந்த வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நம் உடலின் உறுப்புகள் ஆரோக்கியமாக செயல்பட தண்ணீர் அவசியமாகிறது. சிறுநீரக ஆரோக்கியத்திலும் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. எனினும் பல பேர் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட குளிர்ந்த தண்ணீரை அருந்துவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இது நம் உடலுக்கு பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குளிர்ந்த நீர் பருகுவதால் தொண்டை கரகரப்பு, சளி, மற்றும் இருமல் ஏற்படும் என்று அறிந்திருப்போம். ஆனால் இவற்றைத் தவிர உடலின் பல்வேறு இயக்கங்கள் குளிர்ந்த நீரால் பாதிக்கப்படுகிறது. குளிர்ந்த நீரை பருகும் போது உடலின் உள் வெப்ப நிலை மாறுகிறது. இதன் காரணமாக செரிமானம் தாமதப்படுத்தப்படுகிறது. செரிமானம் தாமதமாவதால் சத்துக்கள் உறிஞ்சுவதும் தாமதம் ஆகிறது. மேலும் நம் உடலில் இருக்கும் ஆற்றல் உடலில் வெப்பநிலையை சீர் செய்யவே பயன்படுகிறது.
ஐஸ் வாட்டர் குடிப்பது இதயத்துடிப்பை பாதிக்கிறது. இது ஆய்வுகளின் மூலமும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தண்ணீரின் குளிர்ந்த தன்மையை நமது மூளை நரம்புகளை கட்டுப்படுத்துகிறது. இது இதயத்துடிப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்ந்து தண்ணீர் பருகுவது மிகுந்த ஆபத்தானதாகும். இவற்றால் உணவில் இருக்கும் எண்ணெய் துகள்கள் கெட்டியாகி விடுகின்றன. இவை செரிமானமாகாமல் கொழுப்புகளாகப்படுகிறது. இதன் காரணமாக உடலில் கெட்ட கொழுப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
குளிர்ந்த தண்ணீரை பருகுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் குளிர்ந்த நீர் பருகுவதால் தலைவலி மற்றும் சைனஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இவை உணவு செரிமானத்தை தாமதப்படுத்துவதால் உடல் பருமன் அதிகரிக்கும் பிரச்சனையும் உருவாகிறது. ஐஸ் வாட்டர் குடிப்பதால் இது போன்ற பல தீமைகள் நமது உடலுக்கு ஏற்படுகிறது. எனவே ஐஸ் வாட்டர் குடிப்பதை தவிர்த்து சாதாரண தண்ணீர் குடிக்க பழகிக் கொள்ளலாம்.