தினமும் காபி குடிப்பதால் ஆயுட்காலம் 2 ஆண்டுகள் அதிகரிக்குமாம்!. ஆய்வில் தகவல்!.
Coffee: காபியுடன் உங்கள் நாளைத் தொடங்கினால், புத்துணர்ச்சியுடன் உங்கள் ஆயுளும் அதிகரிக்கும் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மில்லியன் கணக்கான மக்கள் காபியுடன் தங்கள் நாளைத் தொடங்குகிறார்கள். காலையில் ஒரு கப் ஸ்ட்ராங் காபி குடித்தால், உடல் புத்துணர்ச்சி பெறும். உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்க காபி சிறந்த பானம். ஒரு கப் காபி உங்களை உற்சாகமாக உணர வைக்கிறது. சிலர் ஒரு நாளைக்கு பல முறை காபி குடிப்பார்கள். நீங்களும் காபி பிரியர் என்றால், காபி சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி வயதையும் அதிகரிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஆம், காபி குடிப்பவர்கள் சாதாரண மக்களை விட 2 வருடங்கள் வாழ முடியும் என புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
ஏஜிங் ரிசர்ச் ரிவியூஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், காபி குடிப்பது உடலுக்கு நன்மை பயக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. போர்ச்சுகலில் உள்ள கோயிம்ப்ரா பல்கலைக்கழகத்தில், ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆசியா பல நாடுகளிலிருந்து திரட்டப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கான ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், தினசரி மூன்று கப் காபி குடிப்பவர்களின் ஆயுட்காலம் 1.84 ஆண்டுகள் அதிகரிக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காபி குடிப்பதால் பல நாள்பட்ட நோய்களை அகற்றலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. காபி குடிப்பதால் இதய நோய், சிந்தனை மற்றும் நரம்பியல் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் பல நாள்பட்ட நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம். காபியில் 2,000 க்கும் மேற்பட்ட உயிர்வேதியியல் சேர்மங்கள் உள்ளன, அவை ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு நன்மைகளை வழங்குகின்றன, நரம்பு அழற்சியைக் குறைக்கின்றன மற்றும் இன்சுலின் உணர்திறனைக் கட்டுப்படுத்துகின்றன. காபியில் 'வயதான எதிர்ப்பு' தன்மை உள்ளது. காபி குடிப்பது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இருப்பினும், அதிகப்படியான காபி குடிப்பதும் தீங்கு விளைவிக்கும், ஏனெனில் இது உடலில் காஃபின் அளவை அதிகரிக்கிறது.