ஸ்கின் பளபளப்பு முதல் உடல் பருமன் வரை.. தினம் ஒரு கிளாஸ் ஏலக்காய் தண்ணீர் போதும்..!!
பொதுவாகவே மருந்து மாத்திரைகள் நம் நோய்களை தீர்த்து வைத்தாலும் பலவிதமான நோய்களுக்கு சமையலறையிலேயே தீர்வு உண்டு என்பது பலரும் அறியப்படாத உண்மை. மேலும் உண்ணும் உணவை சரியானதாக எடுத்துக்கொண்டு உடலுழைப்பில் கவனமாக இருந்து சுறுசுறுப்பாகவும் இருந்தால் பல வியாதிகள் நமக்கு வராமலேயே போய் விடும். இன்னும் சொல்லப்போனால், ஏலக்காய் தண்ணீரை வைத்து உடல் நலத்தை பேனலாம். ஏலக்காயை வெறுமனே சமையலில் சேர்ப்பதைத் தவிர, அதை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை தொடர்ந்து 30 நாட்கள் குடிப்பதனால் உடலில் பலவிதமான நல்ல மாற்றங்களைக் காணலாம். இப்போது அவை என்னவென்பதைக் காண்போம்.
ஏலக்காய் நீரைத் தயாரிப்பது எப்படி? ஏலக்காய் நீர் தயாரிப்பதற்கு முதல் ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றி இறக்க வேண்டும். பின் அந்த நீரில் 1-2 ஏலக்காயை தட்டிப் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, பின் வடிகட்டி, வேண்டுமானால் தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம். இல்லாவிட்டால் 3-4 ஏலக்காய் விதைகளை எடுத்து, ஒரு கப் நீரில் போட்டு, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.
பயன்கள் :
1. என்னதான் பல்வேறு பொருட்களை உங்களுடைய சருமத்திற்கு தடவி அதன் மூலமாக பளபளப்பையும், பொலிவையும் பெறுவதற்கு நீங்கள் முயற்சி செய்தாலும் ஆரோக்கியமான உணவு மற்றும் நீர்ச்சத்து இல்லாவிட்டால் நீங்கள் மேற்புறமாக செய்யும் அனைத்தும் வீணாக தான் ஆகும்.
2. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது ஏலக்காயில் உள்ள கலவைகள் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது. அதுவும் சர்க்கரை நோயாளிகள் தினமும் காலையில் ஏலக்காய் நீரைக் குடித்து வந்தால், அது இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும் மற்றும் உணவுக்குப் பிறகு இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்க உதவும். எனவே சர்க்கரை நோய் வரக்கூடாது என்றால் ஏலக்காய் நீரை குடித்து வாருங்கள்.
3. கொலஸ்ட்ரால் குறையும் ஏலக்காய் நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். ஏனெனில் இந்த நீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம். எனவே இதைக் குடிக்கும் போது கொலஸ்ட்ரால் அளவு குறையும். முக்கியமாக ஏலக்காயில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்த நாளங்களில் கொழுப்புக்கள் படிவதைத் தடுத்து, மாரடைப்பு வரும் அபாயத்தைக் குறைக்க உதவி புரியும்.
4. வயிற்றுப் புண் தடுக்கப்படும் பல நூற்றாண்டுகளாக செரிமான பிரச்சனைகளுக்கு முதலில் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் தான் ஏலக்காய். ஆய்விலும் ஏலக்காய் வயிற்றுப் புண்களை குணப்படுத்த உதவுவதாக தெரிய வந்துள்ளது. அதுவும் எலியைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஏலக்காய் நீரை கொடுத்து வந்ததில் எலியின் வயிற்றில் உள்ள புண்ணின் அளவு கணிசமாக குறைந்தது தெரிய வந்துள்ளது. இருப்பினும், வயிற்றுப்புண்களுக்கு இந்நீரை முழுமையாக நம்பி எடுப்பதற்கு முன், மருத்துவரின் ஆலோசனையைப் பெற அறிவுறுத்தப்படுகிறது.
5. உயர் இரத்த அழுத்தம் குறையும் ஏலக்காய் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றலை இயற்கையாகவே கொண்டுள்ளது. அதுவும் ஏலக்காய் நீரைக் குடித்து வந்தால், அது உடலில் உள்ள அதிகப்படியான நீர் மற்றும் உப்பை சிறுநீரின் வழியே வெளியேற்ற ஊக்குவிக்கும். இந்த செயல்முறையால், இரத்தத்தின் அடர்த்தி குறைந்து, உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதன் விளைவாக இரத்த அழுத்தமும் குறையும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், ஏலக்காய் நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது தான்.
6. புற்றுநோயைத் தடுக்கும் ஏலக்காய் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. எலியைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஏலக்காய் உடலில் உள்ள நொதிகளை ஊக்குவித்து, புற்றுநோயை எதிர்த்துப் போராடும் மற்றும் புற்றுநோய் கட்டிகளை குறி வைத்து தாக்குவது தெரிய வந்துள்ளது. எனவே புற்றுநோய் வரக்கூடாது என்று நினைத்தால், ஏலக்காய் நீரை அடிக்கடி குடித்து வாருங்கள்.
Read more : புயல் பாதிப்புக்கு மத்தியில் மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி..!! பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு..!!