முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”மது குடிப்பதால் 200 வகையான நோய்கள் வரும்”..!! ”2 ஆண்டுகளில் புற்றுநோய் உறுதி”..!! தமிழ்நாடு அரசை எச்சரிக்கும் அன்புமணி..!!

Anbumani Ramadoss has said that the slogan that drinking alcohol causes 200 types of diseases should be printed on alcohol bottles.
04:35 PM Jan 04, 2025 IST | Chella
Advertisement

மது குடித்தால் 200 வகையான நோய்கள் ஏற்படும் என்ற வாசகத்தை மது பாட்டில்களில் அச்சிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மது அருந்துவதால் குறைந்தது 7 வகையான புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும், இது தொடர்பாக மது புட்டிகள் மீது எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடப்பட வேண்டுமென்றும் அமெரிக்க அரசுக்கு அந்நாட்டின் தலைமை மருத்துவர் பரிந்துரைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் இதே கருத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாமக வலியுறுத்தி வருகிறது. மது குடிப்பதால் 60 வகை நோய்கள் தாக்கும் என இதுவரை கருதப்பட்டு வந்த நிலையில், இப்போது 200 வகை நோய்கள் தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுவின் இந்த தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பாமக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், தமிழகத்தை ஆண்ட அரசுகள் இந்த யோசனையை கண்டுகொள்ளவில்லை.

அமெரிக்கா மதுவுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டு மது வகைகள் பல மடங்கு தரம் குறைந்தவை. மது குடிக்கும் அளவும் தமிழ்நாட்டில் மிகவும் அதிகம். இவற்றை வைத்துப் பார்க்கும்போது அமெரிக்காவில் மது அருந்துபவர்களுக்கு 10 ஆண்டுகளில் புற்றுநோய் ஏற்படும் என்றால், தமிழ்நாட்டில் அது 2 ஆண்டுகளில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது. இதனால், தமிழ்நாட்டில் இத்தகைய விழிப்புணர்வு வாசகங்கள் மது புட்டியில் அச்சிடப்பட வேண்டும்.

மது புட்டிகளில் எச்சரிக்கை வாசகங்களை அச்சிடும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது. எனவே, மது குடித்தால் புற்றுநோய்கள் உள்ளிட்ட 200 வகையான நோய்கள் ஏற்படும் என்ற வாசகத்தையும், எச்சரிக்கைப் படத்தையும் மது புட்டிகளில் பரப்பில் 80 சதவீத அளவுக்கு அச்சிடும் முறையை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Read More : ‘யாருக்கு சார் வேணும் உங்க காசு’..? ’கோடி ரூபா கொடுத்தாலும் இனி என் புள்ளைய வாங்க முடியாது’..!! அமைச்சரிடம் கதறி அழுத சிறுமியின் தாய்..!!

Tags :
Americaanbumanitamilnadu govttasmactn govt
Advertisement
Next Article