100% கேரண்டி.. உங்கள் தொப்பையை ஒரே வாரத்தில் குறைக்க, இந்த ஒரு தண்ணீர் போதும்..
உடல் எடையை குறைப்பது தற்போது உள்ள காலகட்டத்தில் பெரும் சவாலாக மாறிவிட்டது. உடல் எடையை எப்படியாவது குறைத்து விட வேண்டும் என்று பலர் ஆயிரக்கணக்கில் செலவு செய்கின்றனர். பல பெயர்களில் புது விதமான டயட் நாள் தோறும் வந்த வண்ணம் உள்ளது. ஸ்கிப்பிங், ஜாகிங், வாக்கிங், ரன்னிங் என்று எது செய்தாலும் உடல் எடையை குறைக்க முடியவில்லையா? அல்லது உங்களுக்கு இதில் எதையும் செய்ய நேரம் கிடைக்கவில்லையா? அப்போ இந்த முறையை ட்ரை பண்ணுங்க. கட்டாயம் உங்களுக்கு ஒரு வித்யாசம் தெரியும்..
நமது முன்னோர்கள் அதிக அளவு உணவு சாப்பிட்டாலும் சரியான எடையில் இருந்தார்கள். ஆனால் நாம் என்ன தான் கம்மியாக சாப்பிட்டாலும் எடை குறைவதே இல்லை. இதற்க்கு முக்கிய காரணம் உடல் உழைப்பு இல்லாமல் நாம் எப்போதும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது தான். அந்த வகையில், உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கு, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஒரு தண்ணீர் தயாரித்து விடலாம். இந்த தண்ணீரை நீங்கள் தொடர்ந்து குடித்தால் விரைவில உடல் எடை மற்றும் உடலில் இருந்து கெட்ட கொழுப்புகளை குறைக்கலாம் என்று மருத்துவர் கூறியுள்ளார்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க, கொள்ளு கசாயம் ஒரு சிறந்த தேர்வு. இந்த கசாயம் தயாரிக்க, முந்தைய நாள் இரவில் கொள்ளு ஊற வைத்து விடுங்கள். மறுநாள் ஊற வைத்த கொள்ளை வேகவைக்க வேண்டும். வேக வைக்கும் போது அதில், லவங்கப்பட்டை, ஒரு ஸ்பூன் சோம்பு, 4-5 சின்ன வெங்காயம், 4-5 பூண்டு ஆகியவை சேர்த்து வேக வைக்க வேண்டும். கொள்ளு நன்கு குழைந்த பிறகு, அதை வடிகட்டி அதன் நீரை மட்டும் குடிக்க வேண்டும்.
இப்படி நீங்கள் தொடர்ந்து இந்த தண்ணீரை தினமும் காலையில் குடித்து வந்தால், ஒரே வாரத்தில் உடல் எடை கட்டாயம் குறையும். வேகவைத்த கொள்ளுவை வீணாக்காமல், அதனை பூண்டுடன் சேர்த்து சாப்பிடலாம். கொள்ளு, உடலில் உள்ள கொழுப்பை எரிக்கும் தன்மை கொண்டது என்பதால், அதனை வேக வைத்த நீரை குடிக்கும் போது உடலில் எந்த இடத்தில கொழுப்பு அதிகம் உள்ளதோ அந்த இடத்தில கொழுப்பு கரைந்து விடும். குறிப்பாக வயிற்றை சுற்றியுள்ள தொப்பையை குறைக்க இது ஒரு நல்ல தீர்வு. இதயத்தில் அடைப்பு இருந்தாலும் இந்த கொள்ளு கசாயம் கரைத்து விடும்.
Read more: குளிர் காலத்தில் பாடாய் படுத்தும் ஜலதோஷம்: சரிசெய்ய இந்த ஒரு டீ போதும்..