கனவில் பாம்பு கடிச்சு இறந்து போனா கல்யாணம் நடக்குமா.? அட ஆமாங்க கனவு சாஸ்திரத்தில் அப்படிதான் இருக்கு.!
ஒரு மனிதன் ஆழ்ந்து உறங்கும் போது அவனுக்கு கனவு வருகிறது. அந்தக் கனவில் ஒரு நிகழ்வு நடப்பது போன்று காட்சியாக வருகிறது. இது ஒரு மாயை தோற்றம் என்றாலும் நிஜத்தில் நடப்பது போன்று இருக்கிறது. அறிவியல் அடிப்படையில் கனவுக்கென்று இதுவரை எந்த ஒரு வரைமுறையும் இல்லை எனினும் கனவு என்பது மூளையில் இருக்கக்கூடிய நினைவு குறிப்புகள் ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தி கொள்வதால் ஏற்படுகின்ற உணர்வு என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் .
மனிதர்களுக்கு வருகின்ற கனவில் மூலம் அவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என கணிக்கலாம் என்று கனவு சாஸ்திரம் சொல்கிறது. ஒவ்வொரு மனிதருக்கும் கனவு வேறுபடும். சிலருக்கு கனவு இனிமையானதாக இருக்கும். சிலர் அது கனவு பயங்கரமானதாக இருக்கும். கனவுகள் என்பவை நினைவுகளின் வெளிப்பாடு தான் என்றாலும் அவற்றின் மூலம் ஒருவருக்கு கிடைக்க இருக்கின்ற பலனை அறிந்து கொள்ளலாம் என சாஸ்திரங்கள் கூறுகிறது.
ஒருவரது கனவில் வானவில் தோன்றினால் அவரது வருமானம் பெருகும் மற்றும் அவருக்கு வேலையில் முன்னேற்றம் கிடைக்கும் என கனவு சாஸ்திரம் கூறுகிறது. மேலும் ஒருவரது கனவில் விவசாயம் செய்வது போன்று கனவு வந்தால் அவருக்கு சேமிப்பு பெருகும் என சாஸ்திரம் கூறுகிறது. நிலவு கனவில் தோன்றினாள் கணவன் மற்றும் மனைவி இடையே உறவு வலுப்படும் எனவும் தற்கொலை செய்வது போன்று கனவு வந்தால் ஆயுள் கூடும் என்றும் திருமணமாகாத வரை பாம்பு கடித்து இறப்பது போல் கனவு வந்தால் திருமணம் நடக்கும் என்றும் கனவு சாஸ்திரம் கூறுகிறது. மேலும் நமக்கு பிடித்தமான வருகிறது போன்று கனவு வந்தால் அவர்களின் ஆயுள் கூடும் என்றும் கனவு சாஸ்திரத்தில் இருக்கிறது.