இந்தியாவில் தேச பிரிவினையை ஆதரித்த திராவிட சித்தாந்தம்...! தமிழக ஆளுநர் ரவி கருத்து...!
தேச பிரிவினையை ஆதரித்ததில் திராவிட சித்தாந்தமும் ஒன்று என ஆளுநர் ரவி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி மற்றும் ஆளுநர் மாளிகை சார்பில், தேசப்பிரிவினை கொடூரங்களின் நினைவு தினம் தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்கா கூட்ட அரங்கில் நேற்று அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி; வரலாற்று அடிப்படையில் கடந்த காலத்தை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். பாரதம் வன்முறை நாடாக்கப்பட்டு, பல கொடூரங்கள், நாட்டு பிரிவினையால் நடந்தன.
அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு, இந்திய பொருளாதா ரத்தை சீர்குலைக்கும் வேலை களைச் செய்கின்றனர். 1947-ல் ஏற்பட்ட பிரிவினை இன்னும் முடியவில்லை. தற்போதும் நடக்கிறது. இருப்பிடம், மொழி ஆகியவற்றின் மூலம் மக்கள் மனதில் பிரிவினையை உண்டாக்குகின்றனர். பல சித்தாந்தங்கள் பிரிவினையை ஆதரித்தன. அதில் திராவிட சித்தாந்தமும் ஒன்று என்றார்.
பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீரில் பெரும்பகுதி ஆக்கிரமித்தது. அதை மறந்துவிட்டோம். 30 ஆயிரம் சதுர கி.மீ. அளவுக்கு சீனா ஆக்கிரமித்துள்ளது. கச்சத்தீவு உரிமையை விட்டுக்கொடுத்ததால் நமது மீனவர்களின் உரிமை மறுக்கப்பட்டு உள்ளது. 65 ஆண்டுகளாக பாரதத்தை ஆண்டவர்கள் சிந்தனையை உடைக்க நினைத்தனர். அனைவரும் ஒன்று என்பதே பாரதத்தின் சிந்தனை. நமது மதச்சார்பின்மை யும், ஐரோப்பாவின் மதச்சார்பின்மையும் ஒன்றல்லை. நமது மதச்சார்பின்மை அனைவரும் ஒன்று என சொல்கிறது என்றார்.