For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Train: அதிரடியாக உயர்ந்த ரயில் கட்டணம்!… பேசஞ்சர் ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றம்!… பயனர்கள் அதிர்ச்சி!

06:40 AM Feb 27, 2024 IST | 1newsnationuser3
train  அதிரடியாக உயர்ந்த ரயில் கட்டணம் … பேசஞ்சர் ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றம் … பயனர்கள் அதிர்ச்சி
Advertisement

Train: சாதாரண பேசஞ்சர் ரயில்களை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றி அதன் டிக்கெட் விலையையும் தெற்கு ரயில்வே உயர்த்தியுள்ளதால் பயனிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement

தொலைதூர பயணங்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பது ரயில் பயணம்தான். இதனால், அதிகளவில் மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்தநிலையில், பயணிகளுக்கு ஏதுவாக அவ்வபோது பல்வேறு நடவடிக்கைகளை தெற்கு ரயில்வே செய்துவருகிறது. ஆனால், தற்போது அறிவித்திற்கும் கட்டண உயர்வு நடவடிக்கை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சாதாரண பேசஞ்சர் ரயில்களை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றி வருகின்றனராம். இதன்மூலம் பயண நேரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. டிக்கெட் கட்டணம் தான் 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர்.

சென்னை டூ திருப்பதி பேசஞ்சர் ரயிலில் டிக்கெட் கட்டணம் 35 ரூபாயாக இருந்தது. இது தற்போது 70 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னை கடற்கரை டூ வேலூர் செல்லும் ரயில், சென்னை எழும்பூர் டூ புதுச்சேரி செல்லும் ரயில் ஆகியவற்றின் டிக்கெட் கட்டணம் 65 ரூபாயில் இருந்து 80 ரூபாயாக அதிகரித்திருப்பதாக தெரிகிறது.

இதேபோல் தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது. பெங்களூரு, மைசூரு, ஹூப்ளி ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் பேசஞ்சர் ரயில்கள், மெமு மற்றும் டெமு ரயில்கள் ஆகியவை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்பட்டு டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் விளைவாக கடந்த 22ஆம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதாவது, கொரோனா காலகட்டத்திற்கு முன்பு எவ்வாறு டிக்கெட் கட்டணம் இருந்ததோ, அதே கட்டணம் மீண்டும் பின்பற்றப்படும். கட்டண உயர்வு திரும்ப பெறப்படுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Readmore:  பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசனுக்கு காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பு..!!

Tags :
Advertisement