For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிரடியாக உயர்ந்த மளிகை பொருட்கள் விலை!… ஒரு கிலோ பூண்டு ரூ.500க்கு விற்பனை!… முழுவிவரம் இதோ!

09:05 AM Feb 04, 2024 IST | 1newsnationuser3
அதிரடியாக உயர்ந்த மளிகை பொருட்கள் விலை … ஒரு கிலோ பூண்டு ரூ 500க்கு விற்பனை … முழுவிவரம் இதோ
Advertisement

காய்கறிகளை தொடர்ந்து மளிகை பொருட்கள் விலை உயர்ந்து வருவதால், பொதுமக்களின் மாதாந்திர செலவு கணிசமாக அதிகரித்துள்ளது.

Advertisement

காய்கறிகளை தொடர்ந்து மளிகை பொருட்களின் விலை உயர்ந்து வருவதால், பொதுமக்களின் மாதாந்திர செலவு கணிசமாக அதிகரித்துள்ளது.

காய்கறிகளின் விலை ஒரு பக்கம் உச்சத்திற்கு சென்று மக்களை கவலையில் ஆழ்த்தி வரும் நிலையில் அரிசி விலையும் உயர்ந்து வருவது மக்களை அதிர வைத்துள்ளது. மிக்ஜாம் புயல் மழை, வெள்ளம் காரணமாக விளைச்சல் குறைந்ததும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் அரிசி வரத்து குறைந்துள்ளதும் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரிசி விலை 26 கிலோ பை ரூ.200 வரை உயர்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுமட்டுமல்லாமல் மளிகைப் பொருட்களின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அந்தவகையில் ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் செ ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.500 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு கிலோ சீரகம் ரூ.480 க்கு விற்பனையாகிறது. சோம்பு ரூ. 28, கடுகு ரூ.98க்கு விற்பனை செய்யப்படுகிறது. இல்லத்தரசிகள் மட்டுமல்லாது ஹோட்டல் தொழில் செய்பவர்களும், உணவு தொடர்புடைய சிறு தொழில்களை நடத்துபவர்களும் இந்த விலை உயர்வினால் கலக்கமடைந்துள்ளனர்.

Tags :
Advertisement