அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! மேலும் உயரும் அபாயம்..!! நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!
ஆபரணத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வரும் நிலையில், இன்று மேலும் ரூ.200 உயர்ந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்படுகிறது. தங்கம் நேற்று ஒரு கிராம் 5,755 ரூபாய்க்கும், ஒரு சவரன் 46,040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் 5,780 ரூபாயாகவும், சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 46,240 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் 24 கேரட் தங்கம், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, 6,250 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, 50,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது
வெள்ளியின் விலையில் ஒரு ரூபாய் 30 காசுகள் உயர்ந்து, ரூ.81.50 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 81,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை வரும் நாட்களில் மேலும் உயரக் கூடும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.