"சுகன்யா சம்ரித்தி யோஜனா" திட்டம்..!! அக்.1 முதல் அதிரடி மாற்றம்..!! இதை செய்தால் தப்பித்துக் கொள்ளலாம்..!!
பெண் குழந்தைகளுக்காக சேமிக்க வேண்டும் என்றால் பெற்றோர்களின் நினைவுக்கு முதலில் வருவது "சுகன்யா சம்ரித்தி யோஜனா" திட்டம் தான். தபால் நிலையங்களில் பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் இருந்தாலும், பெண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் இந்தத் திட்டத்தில் தான் முதலீடு செய்கின்றனர். சிறுசேமிப்பு திட்டங்களின் கீழ் ஒழுங்கற்ற முறையில் திறக்கப்படும் சேமிப்பு கணக்குகளை முறைப்படுத்த நிதித்துறை சமீபத்தில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அக்டோபர் 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய விதிகள் கணக்கு திறப்பதில் உள்ள முரண்பாடுகளை சரி செய்வதற்காக கொண்டு வரப்படவுள்ளன. தற்போதைய புதிய நடைமுறைகளில் முக்கியமான ஒன்று தாத்தா பாட்டிகளால் திறக்கப்படும் சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்குகளுக்குப் பொருந்தும். அதன்படி, சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் அல்லது பெற்றோர்கள் மட்டுமே SSY கணக்குகளைத் திறந்து நிர்வகிக்க முடியும்.
தாத்தா பாட்டிகளின் பாதுகாப்பில் வளரும் குழந்தைகளுக்காக இத்திட்டத்தில் கணக்கு திறக்கப்பட்டிருந்தால், இந்த புதிய விதிகளுக்கு இணங்க வேண்டும். முன்பெல்லாம் தாத்தா பாட்டி தங்கள் பேத்திகளுக்கு SSY கணக்குகளைத் திறப்பது வழக்கமான நடைமுறையாக இருந்தது. ஆனால், தற்போது சட்டபூர்வ பாதுகாவலர் மற்றும் பெற்றோர் மட்டுமே இந்த கணக்குகளைத் திறந்து நிர்வகிக்க முடியும்.
தாத்தா பாட்டியின் கீழ் குழந்தைகளுக்காக சுகன்யா சம்ரித்தி கணக்குகளை திறந்திருந்தால் அவர்கள் புதிய விதிமுறைகளை எவ்வாறு கடைப்பிடிப்பது? என்பதைப் பார்ப்போம். முதலில் SSY கணக்குகளைச் சட்டப்பூர்வ பாதுகாவலர் பெயரில் மாற்ற வேண்டும். இதற்கு முதலில் SSY கணக்கு பாஸ் புக் வைத்திருக்க வேண்டும். இதில் SSY கணக்கு தொடர்பான அனைத்து விவரங்களும் இருக்கும். அடுத்ததாக பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் இருக்க வேண்டும்.
பெண் குழந்தையுடனான உறவின் சான்று, புதிய பாதுகாவலரின் அடையாளச் சான்று, மேலும் இந்தப் புதிய நடைமுறையின் மூலம் கூடுதலாக 2, 3 SSY கணக்குகளைத் திறப்பவர்களை கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. அதாவது ஒரு பெண் குழந்தைக்கு 2-க்கும் மேற்பட்ட கணக்கு தொடங்கப்பட்டிருந்தால் கூடுதல் கணக்குகள் உடனடியாக மூடப்படும். அசல் தொகை எந்தவித வட்டியும் இன்றி திருப்பி செலுத்தப்படும். SSY வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு குடும்பத்திற்கு இரண்டு SSY கணக்குகளை மட்டுமே திறக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Read More : வெளிமாநில பெண்ணை வரவழைத்து அடிக்கடி உல்லாசம்..!! பணம் தராததால் அதிமுக நிர்வாகியை ஓட விட்ட பெண்..!!