கரண்ட் பில் கட்டிட்டீங்களா..? இனி குளறுபடியே நடக்காது..!! மின்சாரத்துறையில் வந்த புதிய மாற்றம்..!!
தமிழ்நாட்டில் மின் அளவீடு கணக்கீட்டாளர்கள், வீடு வீடாக சென்று இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வீடு மற்றும் அலுவலகங்களின் மின் பயன்பாடு கணக்கெடுப்பை, செல்போன் செயலி மூலம் மேற்கொள்ளும் பணியை சோதனை அடிப்படையில் மின்சார வாரியம் தொடங்கி இருக்கிறது.
தமிழ்நாட்டில் மின்சார பயன்பாடு கணக்கீடு என்பது ஒவ்வொரு 2 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கெடுக்கப்படுகிறது. கடந்த முறை மின் பயன்பாடு எவ்வளவு என்பதையும், இப்போது வரை எவ்வளவு யூனிட் ஓடியிருக்கிறது என்பதை நேரில் வந்து கணக்கெடுக்கும் அதிகாரி, அதன் அடிப்படையில் கட்டணம் விதிப்பார். இப்படி கணக்கெடுப்பு நடத்தும் மின் வாரியத்தின் மின் அளவீடு கணக்கீட்டாளர்களுக்கு, 'எச்.எச்.சி' எனும் கையடக்க கணினி தரப்பட்டுள்ளது.
இந்நிலையில், மின் பயன்பாட்டு கணக்கீட்டில் நடைபெறும் குளறுபடிகளை தடுக்கவும், நுகர்வோர்களுக்கு மின் கட்டண விவரத்தை உடனே தெரிவிக்கும் வகையிலும், மின் பயன்பாட்டு கணக்கெடுப்பு பணியை செல்போன் செயலி மூலம் மேற்கொள்ள தமிழ்நாடு மின்வாரியம் முடிவு செய்தது. அதன்படி, பிரத்யேக ஆப் ஒன்றையும் உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் மின் அளவீடு கணக்கீட்டாளர்கள் இந்த ஆப்பை டவுன்லோடு பதிவேற்றம் செய்து, வீடுகளில் மின் அளவீடு பணியை செய்து வருகின்றனர்.
இந்த ஆப்பில் எப்படி என்றால், பிரத்யேகமாக 'புளூடூத்' கருவி மூலம் மீட்டர் கருவி மற்றும் செல்போன் இடையே இணைப்பை ஏற்படுத்தப்படுகிறது. அதிலுள்ள அளவுகளை வைத்து ஒவ்வொரு வீடுகளின் மின் பயன்பாடுகளும் கணக்கிடப்பட்டு வருகிறது. இந்த புதிய முறை காரணமாக, மின் பயன்பாடு யூனிட் அளவீடுகளில் எந்தவித முறைகேடுகளும், குளறுபடிகளும் நடைபெறாது என்று மின்வாரிய அதிகாரிகள் கூறினார்கள். இதற்கிடையே, டிஜிட்டல் மீட்டருக்கு முழுமையாக மாறும் போது, வரும் காலத்தில் இருந்த இடத்தில் இருந்தே செல்போன் ஆப் மூலமாக மின் கட்டணத்தை அறியவும், கட்டவும் முடியும் என்கிற நிலை உருவாக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read More : ஷூட்டிங் இறுதி நாள்..!! பொள்ளாச்சி ரூம்ல வெச்சு என்னை பலாத்காரம் செய்ய பார்த்தாங்க..!! நடிகை சர்மிளா பரபரப்பு பேட்டி..!!