For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பத்திரப் பதிவுத்துறையில் அதிரடி மாற்றம்..!! இன்று முதல்..!! இனி எல்லாமே ஈசிதான்..!!

Officials of the revenue department have said that the program of automatic belt name change will be fully implemented from today, June 15.
08:54 AM Jun 15, 2024 IST | Chella
பத்திரப் பதிவுத்துறையில் அதிரடி மாற்றம்     இன்று முதல்     இனி எல்லாமே ஈசிதான்
Advertisement

தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஆன்லைன் மூலம் பட்டா பெறும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு வகையான சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இந்நிலையில், இன்று ஜூன் 15ஆம் தேதி முதல் தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றும் செய்யும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், பொதுமக்களுக்கு பட்டா மாறுதல் குறித்த தகவல்கள் கிரையம் கொடுப்பவருக்கும், கிரையம் பெறுபவருக்கும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும். பத்திரப் பதிவுத்துறையில் பதிவு செய்யும் சொத்து விவரங்களின் அடிப்படையில் தான், தானியங்கி முறையில் ஆன்லைன் பட்டா மாறுதல் நடைபெறவுள்ளது. இதனால், ஒரு வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட நபருக்கு பட்டா கிடைத்து விடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிய நடைமுறையின் படி, வாங்கப்படும் சொத்தின் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தால், இது குறித்த தகவல்கள் அனைத்துமே பதிவுத்துறையே வருவாய்த்துறைக்கு தெரிவித்து விடும். பதிவுத்துறை தலைவரின் அறிவுரையின் படி, 100% தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்ய ஜூன் 15ஆம் தேதி முதல் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பத்திரப் பதிவுக்கு பின்பு ஆன்லைனில் மேற்கொள்ளப்படும் பட்டா மாறுதல் தொடர்பான தகவல்களும் சம்பந்தப்பட்ட நில அளவர்கள், கிராம நிர்வாக அலுவலர்களிடம் இருந்து எஸ்எம்எஸ் மூலம் கிரையம் கொடுப்பவர், பெறுபவர் இருவருக்கும் தெரிவிக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More : ’ரத்தம் வடிய வடிய சித்ரவதை’..!! நடிகைக்காக ரசிகரை கொன்ற நடிகர்..!! பிரேத பரிசோதனை அறிக்கையில் ஷாக்..!!

Tags :
Advertisement