மின்சாரத்துறையில் வரப்போகும் அதிரடி மாற்றம்..!! ஆகஸ்ட் மாதம் முதல் புதிய முறை..!!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆகஸ்ட் மாதம் முதல் புதிய முறையில் ரீடிங் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மின்சாரத்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பதவி ஏற்றதில் இருந்து பல அதிரடி முடிவுகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில், முதல்வர் முக.ஸ்டாலின் லண்டனில் இருந்து முக்கியமான டீம் ஒன்றை தமிழ்நாட்டிற்கு வரவழைத்துள்ளார். அவர்களுக்கு சிறப்பு ப்ரொஜெக்ட் ஒன்றும் கொடுக்கப்பட உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை மனதில் வைத்து முதல்வர் முக.ஸ்டாலின் இத்திட்டத்தை வகுத்துள்ளார்.
அதன்படி, லண்டனில் இருக்கும் பிரபல கன்சல்டன்சி நிறுவனமான Ernst & Young நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அவர்களின் அறிவுத்தலின் பெயரில் மின்சார களப்பணியாளர்களுக்கு மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பின்வரும் செயல்களை செய்ய முடியும். மின்கட்டணம் செலுத்தாமல் உள்ள இணைப்புகள் மற்றும் கட்டணம் செலுத்திய இணைப்புகள் பற்றிய விவரங்களை அறிய முடியும்.
மின் பயன்பாடு கணக்கெடுக்கப்பட்ட மற்றும் கணக்கு எடுக்கப்படாத விவரத்தை அறிய முடியும். மின் இணைப்பு பெயர் மாற்றம், மின் பளு குறைப்பு அல்லது அதிகரிப்பு தொடர்பான விண்ணப்பங்கள் பற்றி அறிய முடியும். மின்னகம் சேவை மையம், இணையதளத்தில் மின்சார சேவை தொடர்பாக நுகர்வோர் அளிக்கும் புகார் மற்றும் அதன்மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிய முடியும்.
இதுபோக Ernst & Young நிறுவனம் தமிழ்நாட்டில் இருக்கும் 50 பொதுத்துறை நிறுவனங்களை ஆய்வு செய்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களின் ஆண்டு/காலாண்டு அறிக்கைகள், நடப்பு வருமான குறிப்புகள், இடைக்கால பொருளாதார அறிக்கைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறன் போக்குகள் ஆகியவற்றை ஆய்வு செய்யவுள்ளனர். அந்த நிறுவனங்களின் பல்வேறு பொருளாதார அறிக்கைகளை வைத்து இந்நிறுவனம் அவர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளனர்.
நிதியமைச்சத்தின் பிரிவான பொது நிறுவனங்களின் பணியகம் என்ற பிரிவுடன் இவர்கள் இணைந்து செயல்படவுள்ளனர். இந்நிறுவனம் சமீபத்தில் மின்சார வாரியத்தில் ஆய்வு செய்தது. இந்த ஆய்வு முடிவில் மின்சார வாரியம் தொடர்பாக முக்கியமான பரிந்துரைகளை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, மின்சார வாரியமான Tangedco அமைப்பை 3 ஆக பிரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதாவது, 3 நிறுவனங்களாக இதை மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தின் கடன் ரூ.1.4 லட்சம் கோடியாக உள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த பரிந்துரை அறிக்கை இந்த கடன் நிலைமையை நிர்வகிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
மின் உற்பத்தி, விநியோகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகிய துறைகளை கவனிக்கும் வகையில் தனி தனி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று இந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அரசுதான் இனி முடிவு எடுக்க வேண்டும். இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டில் இதே ஐடியா கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பே தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2017 இல், மின்சார வாரியத்தை தனி விநியோக மற்றும் உற்பத்தி நிறுவனங்களாக பிரிக்க பரிந்துரைத்தது. ஆனால், அப்போது இந்த மாற்றம் செய்யப்படவில்லை.
Read More : 1.25 லட்சம் கன அடி நீர் திறப்பு..!! குடும்பத்துடன் வெளியேறிய காவிரி கரையோர மக்கள்..!!