For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஒலிபரப்பு சேவைகளை வழங்க சட்டபூர்வ அனுமதிக்கான வரைவு..! நவம்பர் 27-ம் தேதி வரை கால அவகாசம்.‌‌!

Draft statutory permit for provision of broadcasting services
06:03 AM Oct 31, 2024 IST | Vignesh
ஒலிபரப்பு சேவைகளை வழங்க சட்டபூர்வ அனுமதிக்கான வரைவு    நவம்பர் 27 ம் தேதி வரை கால அவகாசம் ‌‌
Advertisement

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) 'தொலைத்தொடர்பு சட்டம், 2023-ன் கீழ், ஒலிபரப்பு சேவைகளை வழங்குவதற்கான சட்டபூர்வ அனுமதிக்கான வரைவு சட்டகம்' குறித்த ஆலோசனை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Advertisement

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் 2024 ஜூலை 25 தேதியிட்ட கடிதத்தின் மூலம், தொலைத்தொடர்புச் சட்டம், 2023, இந்தியாவின் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதைத் தெரிவித்து ட்ராய்க்கு ஒரு குறிப்பை அனுப்பியது. தொலைத்தொடர்புச் சட்டம், 2023ன் பிரிவு 3 (1) (a), இன்னும் அறிவிக்கை செய்யப்படவில்லை. தொலைத்தொடர்பு சேவைகளை வழங்க விரும்பும் எந்தவொரு நிறுவனமும், நபரும் பரிந்துரைக்கப்படும் கட்டணங்கள் அல்லது கட்டணங்கள் உட்பட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அங்கீகாரம் பெற வழிவகை செய்கிறது.

ஒலிபரப்பு சேவைகளைப் பொறுத்தவரை, பல ஒலிபரப்பு தளங்கள் (சேவைகளை வழங்குவதற்கு ரேடியோ அலைகள் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றன) அதாவது DTH, HITS, IPTV, தொலைக்காட்சி சேனல்களின் அப்லிங்கிங், டவுன்லிங்கிங் (டெலிபோர்ட்கள் உட்பட), SNG, DSNG, சமூக வானொலி, பண்பலை வானொலி போன்றவை இந்திய தந்தி சட்டத்தின் பிரிவு 4-ன் கீழ் அமைச்சகத்தில் உரிம அனுமதி பெற்று பதிவு செய்யப்பட்டு வந்தன 1885, தொலைத்தொடர்பு சட்டத்தின்கீழ் அனுமதி அளிக்கட்டு வந்தது 2023-இன் தொலைதொடர்பியல் சட்டத்தால் மாற்றீடு செய்யப்பட்டது.

தொலைத்தொடர்புச் சட்டம், 2023-ன் கீழ் ஒளிபரப்பு சேவைகளை வழங்குவதற்கான சேவை அங்கீகாரங்களுக்கான கட்டமைப்பு குறித்த ஆலோசனை அறிக்கையானது பங்குதாரர்களிடமிருந்து கருத்துகள், எதிர் கருத்துகளைப் பெறுவதற்காக டிராய் இணையதளத்தில் (www.trai.gov.in) வைக்கப்பட்டுள்ளது. ஆலோசனை அறிக்கையில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்த எழுத்துப்பூர்வ கருத்துகள் முறையே 2024 நவம்பர் 20-க்குள் பங்குதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன மற்றும் எதிர் கருத்துகள் 2024 நவம்பர் 27-க்குள் வரவேற்கப்படுகின்றன.

Tags :
Advertisement