For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகம்!! நீதிமன்றம் வரை சென்ற விவகாரம்!! 5 கட்ட வாக்குப்பதிவு விவரம் வெளியீடு!!

05:40 AM May 26, 2024 IST | Baskar
தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகம்   நீதிமன்றம் வரை சென்ற விவகாரம்   5 கட்ட வாக்குப்பதிவு விவரம் வெளியீடு
Advertisement

இதுவரை 5 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ள மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு விவரம் முதல்முறையாக வெளியாகியுள்ளது.

Advertisement

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 5 கட்ட தேர்தல் ஏற்கெனவே நடைபெற்று முடிந்துள்ளது. மேலும் 6ஆம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில் மக்களவை தேர்தலில் இதுவரை பதிவான வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிட காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்த்து, 48 மணி நேரத்துக்குள் இறுதி வாக்குப்பதிவு சதவீத விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். வாக்குச்சாவடி வாரியாக பதிவான வாக்குகள் விவரத்தை வெளியிட வேண்டும். இதற்காக, வாக்குப்பதிவு விவரம் அடங்கிய 17-சி படிவத்தை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது 17சி ஃபார்ம் அடிப்படையில் வாக்கு சதவீதத்தை வெளியிடுகிறீர்களா? அதில் ஏதேனும் தேர்தல் ஆணையத்துக்கு பிரச்னை உள்ளதா?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.பிறகு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, சதீஷ் சந்திர சர்மா அடங்கிய விடுமுறை கால உச்சநீதிமன்ற அமர்வில் இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பு, ஒவ்வொரு தேர்தலின்போதும், இதுபோன்ற சந்தேகங்களை தேர்தல் ஆணையத்தின் மீது எழுப்புகின்றனர். இதனால், மக்களுக்கு தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை சிதைகிறது. தற்போது நடந்து வரும் மக்களவை தேர்தலில் கூட வாக்கு சதவீதம் குறைவதற்கு இதுபோன்ற மனுக்கள் மிக முக்கிய காரணமாக அமைகின்றன. இத்தகைய மனுக்கள், மக்கள் மத்தியில் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பதிலாக, குழப்பத்தையே ஏற்படுத்துகின்றன. அதனால், வாக்குச்சாவடிகளுக்கு வருவதற்கு மக்கள் தயங்குகின்றனர். எனவே, இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க கூடாது என தேர்தல் ஆணையம் தரப்பு வாதிட்டது. மனுதாரர் தரப்பில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக எங்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன. அதனால்தான் நாங்கள் நீதிமன்றத்தையே நாடுகிறோம் என மனுதாரர் தரப்பில் வாதிப்பட்டது.

இந்த நிலையில் மனுதாரர் தரப்பில், "தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக எங்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன. அவற்றை தீர்ப்பதற்கே நீதிமன்றத்தை நாடியுள்ளோம். நேரடியாக தேர்தல் ஆணையத்துக்கு செல்லாததற்கு காரணமும் அதுதான். தேர்தல் ஆணையம் எங்கள் சந்தேகங்களை இப்படி கொச்சைப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது" என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் உத்தரவை பிறப்பித்தனர். அதில் ஏற்கெனவே மக்களவை தேர்தலில் 5 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது.இந்த நேரத்தில் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிப்பது சரியாக இருக்காது. அதனால், தேர்தல் முடிந்த பிறகு இந்த வழக்கு விசாரிக்கப்படும். கோடை விடுமுறை முடிந்த பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும். வாக்குச்சாவடி வாரியாக பதிவான வாக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொண்ட 17-சி படிவத்தை பொதுவெளியில் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது எனத் தெரிவித்தனர்.

மேலும் வாக்குப்பதிவின் விவரங்களை தேர்தல் ஆணையம் முழுமையாக வெளியிடாதது தொடர்பாக எழுந்த தொடர் விமர்சனங்களை அடுத்து, 5 கட்டங்களாக வாக்குப்பதிவு முடிந்துள்ள தொகுதிகளின் வாக்குப்பதிவு தொடர்பான முழு விவரங்களையும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. இதுவரை நடந்து முடிந்துள்ள 5 கட்ட வாக்குப்பதிவிலும், தொகுதி வாரியாக பதிவான வாக்கு சதவீதத்தை மட்டுமே தேர்தல் ஆணையம் வெளியிட்டு வந்தது. வாக்குப்பதிவு விவரங்களை முழுமையாக வெளியிடாதது தொடர்பான விமர்சனங்களை அடுத்து தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்குப்பதிவு விவரத்தில் மாநிலம், தொகுதிகள், மொத்த வாக்காளர்கள், பதிவான வாக்குகள் மற்றும் வாக்கு சதவீதம் ஆகியவை அட்டவணையாக இடம்பெற்றுள்ளன. வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணைய செயலியில் 24 மணி நேரமும் பார்க்கும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 17சி ஃபார்மில் பதிவான வாக்குகளை யாராலும் மாற்ற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்த நிலையில், 39 மக்களவைத் தொகுதிகளிலும் பதிவான வாக்கு சதவீதமும் வெளியாகியுள்ளது.

Read More: உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் : இந்தியாவின் ஆறாவது தங்கத்தை வென்றார் சிம்ரன் சர்மா..!

Tags :
Advertisement