முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Logo: தூர்தர்ஷன் லோகோ நிறம் மாற்றம்...! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்...!

11:59 AM Apr 21, 2024 IST | Vignesh
Advertisement

மத்திய பாஜக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியை புகுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில், அரசு நடத்தும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனல் லோகோ சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது. அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்: உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்;தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள். வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்.

பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்;தற்போது தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள். தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும்‌ என தெரிவித்துள்ளார்.

Advertisement
Next Article