'மத்திய அமைச்சர் பதவி வேண்டாமா’..? ’நான் அப்படி சொல்லவே இல்ல’..!! நடிகர் சுரேஷ் கோபி மறுப்பு..!!
மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகப்போவதாக வெளியான தகவலுக்கு நடிகர் சுரேஷ் கோபி மறுப்பு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்பு நேற்று நடைபெற்றது. இதில் கேரளாவின் முதல் பாஜக எம்.பி.யாக திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மலையாள சூப்பர் ஸ்டார் சுரேஷ் கோபி மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார். பதவியேற்ற சில மணிநேரங்களில் மலையாள ஊடகங்களுக்கு அளித்த பேட்டியளித்த அவர், “எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்பதே என் நிலைப்பாடு. இதனை முன்கூட்டியே பாஜக தலைமையிடம் தெரிவித்துவிட்டேன்.
கமிட் ஆன படங்களில் நடித்தே ஆக வேண்டும். எனவே, அமைச்சர் பொறுப்பு எனக்கு வேண்டாம் என்றேன். பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதால் பதவிப்பிரமாணம் செய்துகொண்டேன். எனினும், விரைவில் நான் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவேன் என நம்புகிறேன். அவர்கள் என்னை விடுவிப்பார்கள். எம்.பி. என்ற நிலையில் திருச்சூருக்கு தேவையான பணிகளை மிக சிறப்பாக செய்வேன்” எனக் கூறியிருந்தார். இவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது அவர், “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இருந்து நான் விலகப் போவதாக வெளியான தகவல் தவறானது. கேரள மக்களின் பிரதிநிதியாக மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயம். கேரளா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு அடைய உழைப்போம்” என்று சுரேஷ் கோபி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து விளக்கம் தெரிவித்துள்ளார்.
Read More : தேர்தலால் வந்த சிக்கல்..!! புதிய பயனாளிகளுக்கு உரிமைத்தொகை வழங்குவதில் தாமதம்..!! எப்போது தான் கிடைக்கும்..?