For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Alert | கொளுத்தும் கோடை வெயில்..!! பொது சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..!!

01:17 PM Apr 09, 2024 IST | Chella
alert   கொளுத்தும் கோடை வெயில்     பொது சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை
Advertisement

வெயிலின் பிடியில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

Advertisement

* தேவையான அளவுக்கு குடிநீரை பருக வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிப்பதால் வியர்வை மூலம் நீர் இழப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும்.

* சாலையோர வியாபாரிகள், கட்டுமானத் தொழிலாளர்கள், 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், பேருந்து நடத்துநர், ஓட்டுநர் மற்றும் பயணிகள், விவசாயிகள், இணையதள வாயிலாக உணவு மற்றும் வீட்டுத் தேவை பொருட்கள் விநியோகிப்பவர்கள், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு பணியாளர்கள், குறிப்பாக போக்குவரத்துக் காவலர்கள் ஆகியோர் மிக கவனமுடன் இருக்க வேண்டும்.

* அடிக்கடி வேலை நிமித்தமாக வெயிலில் செல்லும் நபர்கள், திறந்தவெளியில் வேலை செய்பவர்கள் போதிய அளவுக்கு குடிநீரை பருக வேண்டும்.

* பச்சிளம் குழந்தைகள், நோய்வாய்ப்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நோய்வாய்பட்டவர்கள் ஆகியோரும் வெயிலில் செல்லக் கூடாது.

* ஓஆர்எஸ் எனப்படும் உப்பு சர்க்கரை கரைசலை பருக வேண்டும். ஏனெனில், இத்திரவம் அதிகப்படியான வியர்வையினால் ஏற்படும் தாது உப்பு இழப்பினை சமன்படுத்த சோடியம் பொட்டாசியம் போன்ற தாது உப்புகளை கொண்டுள்ளது.

* அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நல வாழ்வு மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ORS - உப்பு சர்க்கரை கரைசல் மக்களுக்கு வழங்கப்படும்.

Read More : மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 உங்களுக்கு வரலையா..? இனி அந்த கவலை வேண்டாம்..!! சூப்பர் நியூஸ்..!!

Advertisement