சிபில் ஸ்கோர் கவலை வேண்டாம்.! எல்ஐசி பாலிசி இருந்தால் போதும் உங்களுக்கும் இனி லோன் கிடைக்கும்.!
எல்ஐசி என்பது இந்தியாவின் அரசு சார்ந்த காப்பீட்டு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தங்களது பாலிசிதாரர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு எல்ஐசி பாலிசி வைத்திருப்பவர்களுக்கு அவர்களது பாலிசியின் அடிப்படையில் கடன் வழங்கும் சேவையை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
வங்கிகளில் அல்லது நிதி நிறுவனங்களில் கடன் பெறும்போது கடன் கேட்பவரின் சிபில் ஸ்கோர் அடிப்படையிலேயே கடன் வழங்கப்படுகிறது. இதனால் குறைவான சிபில் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு கடன் கிடைப்பது அரிது. ஆனால் எல்ஐசி அறிமுகப்படுத்தும் லோன் சலுகையில் எல்ஐசி பாலிசி மட்டுமே போதுமானது. அதனை அடமானமாக வைத்தே எல்ஐசி வழங்கும் லோன் சேவையை அதன் பாலிசிதாரர் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கான வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்ன என்று பார்ப்போம்.
18 வயதடைந்த ஒருவர் எல்ஐசி வழங்கும் லோன் பெறுவதற்கு தகுதியுடையவராக இருக்கிறார். மேலும் அவர் எல்ஐசி பாலிசி எடுத்திருக்க வேண்டும். லோன்பெரும் சமயத்தில் அவரது எல்ஐசி பாலிசி செல்லுபடி ஆனதாக இருக்க வேண்டும். மேலும் மூன்று வருடங்கள் பிரீமியம் தொகையை செலுத்தி இருக்க வேண்டும். இந்த கடனிற்கான வட்டி விகிதம் விண்ணப்பதாரரின் சுயவிவரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்படும். இந்த லோன் எல்ஐசி பிரிமியம் பாலிசியின் அடிப்படையில் வழங்கப்படுவதால் விண்ணப்பதாரர் பிரீமியம் தொகையை சரிவர செலுத்தாமல் இருந்தால் லோன் வழங்கப்படாது. எல்ஐசி பாலிசி அடிப்படையில் லோன் எடுத்தவர் கடனை திருப்பி செலுத்துவதற்கு முன்பே அவரது மெச்சூரிட்டி முடிந்து விட்டால் லோன் பாக்கி தொகையை இன்சூரன்ஸ் மெச்சூரிட்டியில் இருந்து எல்ஐசி எடுத்துக் கொள்ளும்.
இந்த முறையில் லோன் பெறுவதற்கு அருகில் உள்ள எல்ஐசி அலுவலகம் சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பாலிசியின் டாக்குமெண்ட்களையும் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்ட பின்னர் பாலிசி முடிந்ததும் நமக்கு கிடைக்கும் தொகையில் 90 சதவீதம் கடனாக வழங்கப்படும்.