முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’சாதி, மதம் பார்த்து ஓட்டு போட வேண்டாம்’..!! ’அதற்கு பேசாமல் தோற்பதே பெருமை’..!! சீமான் அனல் பறக்கும் பேச்சு..!!

01:23 PM Mar 29, 2024 IST | Chella
Advertisement

லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு சாதி, மதம் பார்த்து ஓட்டுப் போட வேண்டாம். அது எங்களுக்கு தீட்டு. அதற்கு பேசாமல் எப்போதும் போல நாங்கள் தோற்பதுதான் பெருமை என சீமான் பரபரப்பாக பேசியுள்ளார்.

Advertisement

தென்காசி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணனை ஆதரித்து சீமான் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”8 கோடி மக்களுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிற ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும்தான். நாங்கள் தலைமுறைகளை நம்பவில்லை. அடுத்த தலைமுறை தம்பி, தங்கைகளை நம்புகிறவர்கள்.

13 ஆண்டுகளாக நாங்கள் கதறுவது, பாடுபடுவது என்பது எங்களுக்குப் பின்னால் வரும் தம்பி-தங்கைகளுக்கு இத்தகைய நிலைமை வரக் கூடாது என்பதற்குதான். நாங்கள் வெயிலில் நிற்பது அடுத்த தலைமுறை நிழலில் நிற்க வேண்டும் என்பதற்காக. எங்கள் முன்னவர்கள் அதற்காகவே போராடினார்கள். சாதி, மதம் பார்த்து எங்கள் வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போட்டுவிடாதீர்கள். அது எங்களுக்கு தீட்டு. அப்படி நீங்கள் ஓட்டுப் போடுவதற்கு பேசாமல் நாங்கள் எப்போதும் போல தோற்றுப் போவதுதான் பெருமை. எங்களின் பிள்ளைகள் மண்ணுக்கும் மக்களுக்கும் உழைக்கக் கூடிய பிரபாகரனின் ரத்த துளிகள்.

இதை நம்பினால் எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள். இல்லையெனில், எப்போதும் போல எங்களை விட்டுவிடுங்கள். நாங்கள் அப்படி எல்லாம் சாதி, மதம் பார்த்து வாக்கு பெற்று வெல்வதை விட தோற்பதே பெருமைதான். என்றாவது ஒருநாள் வெல்லப் போகும் கோட்பாட்டுக்காக பாடுபடுகிறவர்கள் நாங்கள். எங்கள் சின்னமான ஒலிவாங்கி மூலமாகத்தான் ஆகச் சிறந்த புரட்சியாளர்கள் தங்களது முழக்கத்தை முன்வைத்தார்கள். என் சின்னமான மைக் இல்லாமல் எவனுமே ஓட்டுக் கேட்கவே முடியாது. நாங்கள் சமுத்திரம். எங்களை சாதி குட்டைக்குள் இழுத்துவிடாதீர்கள். மதம், சாதி கடந்து மக்களை நேசிக்கிற பிள்ளைகள் எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்” என்று பேசினார்.

Read More : ’சசிகலா காலில் ஏன் விழுந்தேன்’..? விடாமல் துரத்தும் கேள்விக்கு நச்சுனு பதில் கொடுத்த எடப்பாடி..!!

Advertisement
Next Article