குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!! மன அழுத்தம், நினைவு திறன் பாதிக்கும்..!!
பெண்கள் பிரசவத்திற்குப் பிறகு தனது ஆரோக்கியத்திலும், குழந்தையின் ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, புதிதாகப் பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தாயின் தாய்ப்பால் மிகவும் முக்கியமானது. ஆனால், அதை சரியாக கொடுத்தால் மட்டுமே குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி உயரும். அவர்களுக்கு மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, இரைப்பை குடல் அழற்சி, சளி, நிமோனியா மாதிரியான சுவாச நோய்களை எதிர்க்கும் வலு தாய்ப்பாலில் தான் உள்ளது. பச்சிளம் குழந்தைகளுக்கு ஒவ்வாமை, அழற்சி, ஆஸ்துமா ஆகியவை ஏற்படாமல் இருக்க தாய்ப்பால் ஊட்டம் கொடுக்கும்.
தாய்ப்பால் கொடுக்கும் போது ஸ்மார்ட் போன்..!!
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது மொபைல் பயன்படுத்தும் பழக்கம் சிலருக்கு உள்ளது. இப்படி தாய்ப்பால் கொடுக்கும் போது மொபைல் போன் பயன்படுத்துவதால் குழந்தைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வுகளில் பல்வேறு தகவல்கள் கூறுகின்றன. இதுதொடர்பாக ரூபி ஹால் கிளினிக்கின் தலைமை ஐவிஎப் (IVF) ஆலோசகர் மற்றும் எண்டோஸ்கோபிஸ்ட் மருத்துவர் சுனிதா கூறுகையில், புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஓய்வெடுக்க நேரம் குறைவாக இருக்கும். அதனால் சில பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர்.
இது சரியல்ல என்கிறார் டாக்டர் சுனிதா தண்டுல்வாட்கர். தாயும், குழந்தையும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருக்கும்போது மொபைல் போன்களைப் பயன்படுத்தக்கூடாது எனவும் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், தாய்ப்பால் கொடுக்கும் போது ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது தாயின் தோரணை மற்றும் குழந்தையுடன் தாய் தொடர்பு கொள்வதில் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக, தாய்க்கு முதுகுவலி ஏற்படலாம்.
மொபைல் பயன்பாடு தாய்மார்களிடையே குழந்தையுடன் தொடர்புகொள்வதைக் குறைக்கிறது என பல ஆய்வுகள் நமக்கு வெளிச்சமிட்டு காட்டுகின்றன. இது அந்த பச்சிளம் குழந்தையின் உணர்திறனுடன் விளையாடுகிறது. அவர்களின் எதிர்வினையாற்றும் திறனில் குறுக்கிடலாம். இதன் மூலம் குழந்தைக்கு மன அழுத்தம் ஏற்படுத்தலாம். அந்த குழந்தைக்கு நினைவு திறன் எதிர்மறையாக பாதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
நர்சிங் மற்றும் ஹெல்த் சயின்ஸில் வெளியான ஒரு ஆய்வு, தாய்ப்பால் கொடுக்கும் போது தாயானவள், ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால், தாய்-குழந்தை தொடர்புகள் மாறுமா என்பது குறித்து விளக்கியது. இந்த ஆய்வில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் சூழலிலும், ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் தாய்ப்பால் கொடுக்கும் சூழலிலும் தாய், குழந்தை ஆகியோரின் உடல்நிலை சரிபார்க்கப்பட்டது.
இதில் குழந்தைக்கும் தாய்க்குமான தொடர்பு பாதிக்கப்படுவது தெரியவந்தது. தாய்ப்பால் கொடுக்கும்போது மொபைல் பயன்படுத்தினால் குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். இது அந்த பிஞ்சு குழந்தைகளின் மூளை செல்களை சேதப்படுத்தும் என சொல்லப்படுகிறது.
Read More : 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! தமிழ்நாடு அரசில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!