முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”திருப்பாதீங்க திருப்பாதீங்க”..!! கேமராவை பார்த்ததும் முகத்தை மூடிக்கொண்டு ஓடிய விக்ரமன்..!!

05:01 PM Jan 09, 2024 IST | 1newsnationuser6
Advertisement

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் விக்ரமன். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செய்தித் தொடர்பாளராகவும் இருந்து வருகிறார். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பெண் மோசடி புகாரில் சிக்கினார். அதாவது, கடந்த சில மாதங்களாகவே, விக்ரமன் மீது இளம்பெண் ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார்.

Advertisement

இதேபோல் இளம்பெண்ணுடன் விக்ரமன் உரையாடிய வாட்ஸ் அப் சாட்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், இதற்கு விக்ரமன் தரப்பு மறுப்பு தெரிவித்தது. தொடர்ந்து அந்தப் பெண் கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைமில் புகார் அளித்தார். அந்த புகாரில், ”விக்ரமனும் நானும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்தோம். அவர் என்னை காதலிப்பதாக சொல்லி வந்தார். சட்டரீதியாக திருமணமும் செய்து கொள்ளும்படி அவரிடம் கூறினேன்.

ஆனால் அவர் மறுத்துவிட்டார். என்னை காதலிப்பதாக சொல்லி என்னிடம் இருந்து ரூ.13.7 லட்சம் பணம் வாங்கினார். அதில், ரூ.12 லட்சத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார். மீதி ரூ 1.7 லட்சம் திருப்பி தர வேண்டும். என்னை காதலிப்பதாக சொல்லி மோசடி செய்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைமையிடம் புகார் அளித்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, விக்ரமன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்திருந்தார் .

ஆனால், இந்த புகாருக்கு விக்ரமன் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், அந்த பெண் அளித்த புகாரின் பேரில், விக்ரமன் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த புகார் தொடர்பான விசாரணைக்காக விக்ரமன் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது 13 பிரிவுகளின் கீழ் பதிவான வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை முடிந்து வெளியே வந்த விக்ரமன், அங்கிருந்த செய்தியாளர்கள் படம் பிடிப்பதை பார்த்ததும் முகத்தை மூடிக்கொண்டு காரில் வேகமாக சென்று விட்டார்.

Tags :
காவல்துறைபிக்பாஸ் நிகழ்ச்சிவிக்ரமன்விக்ரமன் மீது புகார்
Advertisement
Next Article