முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

டீ குடிக்கும்போது இதை மட்டும் தொடவே தொடாதீங்க..!! இவ்வளவு பாதிப்புகள் வருமா..?

Nuts are rich in iron. Theanine, a chemical in tea, prevents the body from absorbing this nutrient.
02:19 PM Jan 04, 2025 IST | Chella
Advertisement

வீட்டில் டீ குடித்தாலும், கடைகளில் டீ குடித்தாலும் ஏதோ ஒரு ஸ்நாக்ஸ் எடுத்து சாப்பிடுவது நமது வழக்கமாக இருக்கிறது. மக்களின் ரசனைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பிளாக் டீ, மசாலா டீ, லெமன் டீ என பல்வேறு வகையான டீ கிடைக்கிறது. குறிப்பாக, ஒயிட் டீ-யில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பல இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது நமது உடலின் கெட்ட கொழுப்புகளை கரைக்கவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. என்னதான் டீ அருந்துவதில் உடலுக்கு பல நன்மைகள் இருக்கின்றன என்றாலும், அதனுடன் சேர்த்து சாப்பிடும் மற்ற ஸ்நாக்ஸ் அல்லது உணவுகள் நம் உடல் நலனுக்கு கோளாறுகளை ஏற்படுத்தக் கூடும்.

Advertisement

மைதா அல்லது கடலை மாவில் செய்யப்பட்ட தின்பண்டங்கள் : வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு ஒரு கப் டீ உடன், மைதா அல்லது கடலை மாவில் செய்யப்பட்ட பலகாரங்களை பரிமாறுவது வழக்கமாக இருக்கிறது. இவ்வளவு ஏன், நாமே கடைக்கு டீ அருந்தச் சென்றாலும் முதலில் பஜ்ஜி அல்லது கடலை மாவு பக்கோடா, மைதா மாவு போண்டா போன்றவற்றை ஒரு ரவுண்டு கட்டிவிட்டு தான் டீ அருந்துகிறோம். ஆனால், டீ உடன் இதுபோன்ற பலகாரங்களை சேர்த்து சாப்பிடுவது செரிமானம் சார்ந்த பிரச்சனைகளை கொண்டு வரும்.

எலுமிச்சை : நம்மில் பலருக்கு லெமன் டீ மிகவும் பிடிக்கும். ஆனால், இது வயிறு நலனுக்கு நல்லதல்ல என்பது பலருக்கு தெரியாது. டீ தூளும், எலுமிச்சை சாறும் ஒன்று சேரும் போது வயிற்றில் அசிடிட்டி, உப்புசம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

பச்சைக் காய்கறிகள் : சிலர் பச்சைக் காய்கறி உணவுகளை சாப்பிட்ட பிறகு உடனடியாக டீ அருந்துவார்கள். ஆனால், இது முற்றிலும் தவறானது. காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துகள், இரும்புச் சத்தை உடல் ஈர்த்துக் கொள்ளும் செயல்திறனை பாதிப்பதாக டீ அமைகிறது.

நட்ஸ் : நட்ஸ் வகைகளில் இரும்புச்சத்து மிகுதியாக உள்ளது. டீ-யில் உள்ள டெனனின் என்ற வேதிப்பொருள் இந்தச் சத்தை உடல் உறிஞ்சிக் கொள்ளாமல் தடுக்கிறது. ஆகவே, டீ உடன் நட்ஸ் வகைகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

மஞ்சள் : அதிகம் மஞ்சள் சேர்க்கப்பட்ட உணவு வகைகளை சாப்பிடும் போது, டீ அருந்துவதை தவிர்க்க வேண்டும். டீ மற்றும் மஞ்சளில் உள்ள ரசாயன பொருட்கள் ஒன்று சேரும் போது நமது ஜீரண சக்தியை பாதிக்கும்.

Read More : தமிழ்நாட்டில் மீண்டும் சம்பவம் செய்யப்போகும் கனமழை..!! வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்..!!

Tags :
teaஆரோக்கியமான வாழ்வுஆரோக்கியம்இரும்புச் சத்துடீ
Advertisement
Next Article