’நான் உங்க வீட்ல இருக்குறத யார்கிட்டயும் சொல்லாதீங்க’..!! ராம் சரண் வீட்டில் தங்கியிருந்த மோகன் பாபு மகள்..!! பரபரப்பு தகவல்..!!
தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகர் மோகன் பாபுவின் மகள் மஞ்சு லக்ஷ்மி, தொடர் பேட்டிகளை கொடுத்து பரபரப்பை கிளப்பி வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், தனது தந்தையை மறைமுகமாக குற்றம் சாட்டினார்.
தென்னிந்தியாவில் ஹீரோக்களின் மகள்களுக்கும், சகோதரிகளுக்கும் சலுகைகள் வழங்கப்படுவதில்லை என்று அவர் கூறியிருந்தார். மேலும், தான் நடிகையாவதை தனது தந்தை விரும்பவில்லை. ஆணாதிக்க சமூகத்தில் தானும் பாதிக்கப்பட்டதாக மஞ்சு லக்ஷ்மி கூறியிருந்தார். தற்போது மஞ்சு லக்ஷ்மி தனது திரை வாழ்க்கைக்காக மும்பையில் வசிக்கிறார். தனது தோழிகளான ரகுல் ப்ரீத் மற்றும் ராணா ஆகியோர் தன்னை மும்பைக்கு வரும்படி கேட்டு ஊக்கப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நான் மும்பைக்கு மாறிய போது எனக்கு அங்கு தங்குவதற்கு வீடு இல்லை. அப்போது ராம் சரண் வீட்டில் தான் தங்கி இருந்தேன். ஆனால், நான் அங்கு தங்கியது யாருக்கும் தெரியாது. நான் உங்கள் வீட்டில் தான் இருக்கிறேன் என்று யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று ராம் சரணிடம் கூறினேன். நான் ராம் சரண் வீட்டில் தங்கியிருப்பதை மறைக்க காரணம் இருக்கிறது. அது தெரிந்தால் மும்பையில் எனக்கு யாரும் வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள்.
நீங்கள் ராம் சரண் வீட்டில் தங்கியிருக்கிறீர்கள். எங்களிடமிருந்து உங்களுக்கு என்ன தேவை? என்று கேட்பார்கள். அதனால்தான் அதை ரகசியமாக வைத்திருந்தேன். எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் என் வீட்டில் இருங்கள் என்று ராம் சரண் கூறினார். ஆனால் சிறிது காலத்திலேயே நான் வாடகைக்கு அப்பார்ட்மெண்ட் எடுத்து மாறிவிட்டேன். நான் எத்தனை நாட்கள் அவரின் வீட்டில் தங்கி இருந்தேன் என்று கூட ராம்சரணுக்கு தெரியாது” என்று மஞ்சு லக்ஷ்மி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் “ நாங்கள், 142 கலைஞர்களுடன் வாட்ஸ்அப் குழுவை உருவாக்கியுள்ளோம். அதில் ராம் சரண், அல்லு அர்ஜுன், ராணா டகுபதி உள்ளிட்ட பலர் உள்ளனர். அந்தக் குழுவில் தங்கள் படங்களின் டீசர் மற்றும் டிரைலர்களை வெளியிடுவார்கள் . குழுவில் உள்ள அனைவரும் தங்கள் தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகளில் அவற்றைப் பகிர்ந்து கொள்வார்கள். அதனால்தான் குழு உருவாக்கப்பட்டது” என்று கூறினார்.
Read More : இந்த பழக்கம் உங்ககிட்டயும் இருக்கா..? இது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துமாம்..!! மக்களே எச்சரிக்கை..!!