ஸ்வெட்டர், சாக்ஸ் அணிந்து தூங்கவே கூடாது... ஏன் தெரியுமா? கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்..
ஒரு சிலரால் எந்த வலியை தாங்கினாலும், குளிரை மட்டும் தாங்கவே முடியாது. இதனால் குளிர் காலம் வந்த உடன் போர்வை, ஸ்வெட்டர், சாக்ஸ் என அனைத்தையும் மாட்டிக்கொண்டு தூங்குவது உண்டு. இதனால் உடலுக்கு இதமாக இருக்கும். ஆனால் அது உடல் நலத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இப்படி தூங்குவதால் அப்படி என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதைப்பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.
குளிர் காலத்தில், பலர் கம்பளி ஆடைகளை அணிந்து, போர்வையும் போர்த்திக் கொண்டு தூங்குவார்கள். இப்படி செய்வதால் நன்கு தூக்கம் வரும், ஆனால் இப்படி தூங்குவது இதய நோயாளிகளுக்கு ஆபத்தானது. ஏனென்றால், நாம் போர்வை, ஸ்வெட்டர் எல்லாம் அணிந்து தூங்கும்போது, நம் உடல் வெப்பத்தை வெளியே விடாமல் உள்ளேயே வைத்திருக்கும். இதனால் உடல் வெப்பநிலை அதிகரித்து, பிபி மிகவும் குறைந்து விடும். இதனால் இதய நோயாளிகளுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் பெரிய பிரச்சனைகள் ஏற்படும். தூங்கும்போதே ஒரு சிலர் உயிரிழக்க இதுவும் கரானமாக இருக்கலாம். இதனால் தூங்கும் போது பருத்தி ஆடைகளை அணிந்து தூங்குவது நல்லது.
மேலும், நாம் அணியும் கம்பளி ஸ்வெட்டர்கள் நம் உடல் வெப்பநிலையை அதிகரித்து வியர்வையை உண்டாக்கும். இதனால் சருமத்தில் அரிப்பு, எரிச்சல் ஏற்படும். குறிப்பாக வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்சினை அதிகமாக இருக்கும். அதனால் தான் இரவில் தூங்கும் போது ஸ்வெட்டர், சாக்ஸ் அணியக்கூடாது. மாறாக, லேசான பருத்தி ஆடைகளை அணிந்து கொண்டு தூங்குவது நல்லது. ஒரு வேலை உங்களுக்கு குளிர் அதிகமாக இருந்தால், மின் விசிறியை ஆப் செய்து விட்டு, இடுப்பளவு மட்டும் போர்வையை மூடி தூங்குங்கள்..