முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’வேலை வேலை என்று ஓடாதீர்கள்’..!! ’உணவு இடைவெளியின்போது உடலுறவு வைத்துக் கொள்ளுங்கள்’..!! ரஷ்யா அதிரடி..!!

The Russian people should not always run for work. Russian President Putin has advised to have sex during meals and breaks.
01:56 PM Sep 17, 2024 IST | Chella
Advertisement

ரஷ்ய மக்கள் எப்போதும் வேலை வேலை என்று ஓடக்கூடாது. உணவு மற்றும் இடைவெளியின் போது உடலுறவு கொள்ள வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதின் அட்வைஸ் கொடுத்துள்ளார்.

Advertisement

உலகின் பல்வேறு நாடுகளிலும் மக்கள் தொகை சரிவது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. ஜப்பான், தென் கொரியா நாடுகளில் மக்கள் தொகை தொடர்ந்து சரிந்தே வருகிறது. அப்படி மக்கள் தொகை குறைந்து வருவதால், மிகப் பெரிய பிரச்சனையை எதிர்கொள்ளும் நாடாக ரஷ்யா இருக்கிறது. இப்போது பெரிய பிரச்சனை இல்லையென்றாலும், வரும் காலத்தில் இது மிகப் பூதாகரமாக வெடிக்கும் ஆபத்து உள்ளது. இதற்கிடையே, ரஷ்யா அதிபர் புதின் இந்த விவகாரத்தில் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

அதாவது வேலை செய்யும் இடத்தில், மதிய உணவு மற்றும் காஃபி இடைவேளையின் போது உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு புதின் கோரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யாவின் மக்கள் தொகை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இப்போது கருத்தரிப்பு விகிதம் 1.5ஆக உள்ளது. அதேநேரம் ரஷ்ய நாட்டின் மக்கள் தொகை நிலைத்தன்மைக்குப் பிறப்பு விகிதம் குறைந்தபட்சம் 2.1ஆக இருக்க வேண்டும். இதற்கிடையே, ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக பல லட்சம் பேர் உயிர் ஆபத்தில் உள்ளது.

இதனால், ரஷ்யாவில் மக்கள் தொகை விவகாரம் மிகப் பெரிய பிரச்சனையாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ரஷ்யாவின் சுகாதார அமைச்சர் டாக்டர் யெவ்ஜெனி ஷெஸ்டோபலோவ் கூறுகையில், "மக்கள் தொகையை வளர்த்தெடுப்பது முக்கியமானது. இதற்கு வேலை ஒரு தடையாக இருக்கக்கூடாது. குடும்ப விரிவாக்கத்திற்கு மதிய உணவு மற்றும் காபி இடைவேளையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வேலையில் பிஸியாக இருப்பதால் குழந்தையைத் தள்ளிப் போடுகிறோம் எனச் சொல்வதை ஏற்க முடியாது. வேலை செய்யும் போது இடைவெளியில் கூட இதை நீங்கள் செய்யலாம். இதை எல்லாம் தள்ளிப் போடக்கூடாது. வாழ்க்கை மிக விரைவாகச் செல்லும் ஒன்று. எனவே, நாம் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிரேக் நேரத்தைப் பயன்படுத்தி குழந்தைகளை உருவாக்குங்கள்" என்று அவர் கூறினார்.

Read More : திடீரென ரயில் முன் தவறி விழுந்த பெண் எம்.எல்.ஏ..!! பரபரப்பு வீடியோ உள்ளே..!!

Tags :
உடலுறவுகுழந்தைகள்ரஷ்ய அதிபர் புதின்
Advertisement
Next Article