முட்டைகளை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுபவரா நீங்கள்..? கொடிய பாக்டீரியா தாக்கும் அபாயம்..!! வெளியான அதிர்ச்சி ஆய்வு முடிவுகள்..!!
முட்டையை குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதால் முட்டையின் சுவை கெட்டுப்போவது மட்டுமின்றி, அதனால் உண்டாகும் பாதிப்புகளும் அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் குளிர்சாதனப் பெட்டி இல்லாத வீடே இல்லை என்று சொல்லலாம். ஒரு காலத்தில் ஆடம்பரத் தேவையாக இருந்த குளிர்சாதனப் பெட்டி, தற்போது மக்களின் அத்தியாவசிய தேவையாக மாறியுள்ளது. பழங்கள், காய்கறிகள் மற்றும் பல உணவுப் பொருட்களை நாம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கிறோம். அந்த வகையில், முட்டைகளை குளிர் சாதனப் பெட்டியில் வைக்கும் வழக்கத்தை பலரும் கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக முட்டைகள் பல நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும் என நம்புகின்றனர். ஆனால் அப்படி முட்டைகளை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக் கூடாது என புதிய ஆய்வு கூறுகிறது. அறை வெப்பநிலையில் பராமரிக்கப்படும் முட்டைகளை விடவும், குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் முட்டைகள் மிக விரைவாக கெட்டுப்போய் விடும். மேலும், பாலைப்போல் திரிந்து விடும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏனென்றால், முட்டைகளில் விரைவில் பாக்டீரியா தொற்று உண்டாகிவிடும் அபாயம் உள்ளது. குறிப்பாக வயிற்றிற்கு கேடு விளைவிக்கும் “சால்மோனெல்லா” வகை பேக்டீரியா முட்டைகளின் ஓடுகளில் உருவாகும். முட்டையை குளிர்ச்சியான இடத்தில் வைத்திருந்த பிறகு, அதனைப் பயன்படுத்தும் நேரத்தில் அறைவெப்ப நிலைக்கு கொண்டு வருவோம். அப்போது வெப்ப நிலை வேறுபாட் டினால், முட்டையின் ஓட்டில் இருக்கும் சிறுதுளைகளின் வழியே பாக்டீரியாக்கள் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து, முட்டையின் உள்ளே சென்று விடும்.
எனவே, முட்டையை வாங்கினால் அதை உடனே சமைத்து சாப்பிட்டு விட வேண்டும் அல்லது அறை வெப்பநிலையிலேயே பராமரிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் வாங்கிய முட்டையில் சால்மோனெல்லா இருந்து, அதனை குளிர்சாதனப்பெட்டில் வைத்து பராமரித் தால், இதர முட்டைகளும் அந்த கொடிய பாக்டீரியாவால் தாக்கப்படும். அதோடு, ஆரோக்கியத்திற்கு பாதிப்பு தான் உண்டாகும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.