மறந்தும் இந்த 4 பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்காதீங்க.! 24 மணி நேரத்தில் விஷமாக மாறும் அபாயம்.!
நம் வீட்டில் இருக்கும் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவை கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக இருக்க உதவும் சாதனம் ரெஃப்ரிட்ஜிரேட்டர். இதில் உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை சேமித்து வைக்கும் போது அவை நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க உதவுகிறது. எனினும் சில பொருட்களை பிரிட்ஜில் வைக்கும் போது அவை ஒரு நாளிலேயே விஷமாக மாறும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். ஏனெனில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு வெப்ப நிலை இருக்கிறது. அந்த வெப்ப நிலை மாறும் போது அந்த உணவுப் பொருட்களின் தன்மையும் மாறி விஷமாக மாறலாம் எனவும் தெரிவிக்கின்றனர். ஃப்ரிட்ஜில் வைப்பதால் விஷமாக மாறும் நான்கு உணவுப் பொருட்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பூண்டுகளை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்த வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக பூண்டுகளை தோலுரித்து குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தும் போது அவை பூஞ்சை தாக்குதலுக்கு ஆளாகிறது. இதனால் அவை விஷமாகி புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பூண்டை எப்போதும் அறை வெப்பநிலையிலேயே வைத்திருக்க வேண்டும் அதுதான் ஆரோக்கியமானது எனவும் அறிவுறுத்துகின்றனர். மேலும் வெங்காயத்தையும் குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்துவது அவற்றை விஷமாக மாற்றும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பாலானவர்கள் ஓய்வு நேரங்களில் சின்ன வெங்காயத்தை உரித்து ஃப்ரிட்ஜில் வைப்பதை பார்த்திருப்போம் மேலும் பயன்படுத்தி வெங்காயம் போக மீதி வெங்காய துண்டை ஃப்ரிட்ஜில் சேமித்து வைப்பார்கள் இது மிகவும் ஆபத்தானது .
ஏனெனில் தோல் உரித்த வெங்காயத்தை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது அவை சுற்றுச்சூழலில் இருக்கும் பாக்டீரியாக்களை உறிஞ்சி விடும். மேலும் வெங்காயத்தில் இருக்கக்கூடிய சர்க்கரை ஸ்டார்ச் ஆக மாற்றப்படுகிறது. இவை உடலுக்கு மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கின்றனர். இஞ்சி பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியது என்றாலும் வெட்டிய மற்றும் தோல் உரித்த இஞ்சியை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்துவது அதனை விஷமாக மாற்றும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இவ்வாறு வெட்டிய இஞ்சியை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது அவற்றில் பூஞ்சைகள் படர்ந்து விடும். மேலும் இவற்றை நாம் உணவில் பயன்படுத்தும் போது சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் செயலிழப்பு அபாயங்கள் இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் . நாம் சமைக்கும் சாதமும் மீந்து போய்விட்டால் அதனை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டாம் என மருத்துவர் எச்சரிக்கின்றனர். அவற்றில் பூஞ்சைகள் உருவாக வாய்ப்பு இருப்பதால் ஃப்ரிட்ஜில் வைப்பதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கின்றனர். அப்படியே வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டாலும் 24 மணி நேரத்திற்கு மேல் வைக்க வேண்டாம் எனவும் அறிவுரை வழங்குகின்றனர்.