For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”புளித்துப் போன காரணங்களைக் கூறி மதுவிலக்கை தள்ளிப் போடாதீங்க”..!! ”இல்லையென்றால் பதவி விலகுங்க”..!! அன்புமணி விளாசல்..!!

'If prohibition of alcohol is not possible in Tamil Nadu, the government should resign' said BAMA leader Anbumani Ramadoss.
06:43 PM Jun 29, 2024 IST | Chella
”புளித்துப் போன காரணங்களைக் கூறி மதுவிலக்கை தள்ளிப் போடாதீங்க”     ”இல்லையென்றால் பதவி விலகுங்க”     அன்புமணி விளாசல்
Advertisement

”தமிழ்நாட்டில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்றால் அரசு பதவி விலக வேண்டும்” எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை கொண்டு வருவதற்கான சூழல் இல்லை. தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால், அண்டை மாநிலங்களிலிருந்து மது உள்ளே வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று அமைச்சர் முத்துசாமியும், உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவை. டாஸ்மாக் மதுவில் கிக் இல்லாததால் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்கின்றனர் என்று அமைச்சர் துரைமுருகனும் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கின்றன.

அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான சூழல் இல்லை என்று கூறியிருக்கிறார். அதன் பொருள் என்னவென்று தெரியவில்லை. மதுவிலக்கை நடைமுறைப்படுத்த எந்த சூழலும் தேவையில்லை. நாட்டு மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதுமானது. அந்த எண்ணம் இருந்தால் ஒரே ஆணையில் மதுவிலக்கை அறிவித்து, நாளை முதல் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியும்.

கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற புளித்துப் போன காரணங்களைக் கூறியே மதுவிலக்கை தள்ளிப்போடக் கூடாது. தமிழ்நாட்டில் சுமார் ஐந்தாயிரம் மதுக்கடைகள் இருக்கும்போதே மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. இது அரசின் தோல்வியே தவிர, இதற்கு வேறு காரணங்கள் இல்லை. அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் இருந்தாலும் அங்கிருந்து தமிழ்நாட்டிற்குள் மது வராமல் தடுக்க வேண்டியதும், கள்ளச்சாராயத்தை தடுக்க வேண்டியதும் அரசின் அடிப்படைக் கடமைகள்.

தமிழ்நாட்டில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்றால் அரசு பதவி விலக வேண்டும். மதுக்கடைகளை தெருவுக்குத் தெரு திறந்து விட்டு, உழைப்பவர்களின் அசதியைப் போக்க அவர்களுக்கு மது தேவை என்று உழைக்கும் மக்களின் மீது பழியை சுமத்துவது கண்டிக்கத்தக்கது. அதிலும் துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர்களே சற்றும் சமூகப் பொறுப்பு இல்லாமல் இப்படி பேசுவது நியாயமல்ல. எனவே, தமிழ்நாட்டில் உடனடியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Read More : ’விபச்சாரத் தொழிலில் நல்ல பணம்’..!! ஓய்வு பெற்ற நீதிபதியின் மகனுக்கு டிவி தொகுப்பாளினியை இறையாக்க முயன்ற பூசாரி..!!

Tags :
Advertisement