கோயிலுக்கு செல்பவர்கள் இந்த பாவத்தை மட்டும் பண்ணிடாதீங்க..!! பக்தர்களே கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!
நாம் கோவிலுக்கு செல்லும் போது பூ, பழம், தேங்காய், மாலை போன்ற பல பொருட்களை பிரசாதமாக நமக்கு தருவார்கள். இப்படி கொடுக்கும் பொருட்களை, அப்போது மட்டும் பக்தியுடன் வாங்கி வந்து விட்டு, வீட்டில் கொண்டு வந்து, அலட்சியமாக வைக்கக் கூடாது. இறைவனுக்கு சமர்பிக்கப்பட்ட பொருட்கள், இறைவன் சன்னதியில் இருந்து பிரசாதமாக கொடுக்கப்படும் பொருட்கள் அனைத்துமே தெய்வீக தன்மை வாய்ந்ததாகும். கோவிலில் கொடுக்கப்படும் பூக்கள், உதிரிப்பூக்களாக இருந்தால் அவற்றை தொடுத்து, பெண்களாக இருந்தால் தலையில் வைத்துக் கொள்ளலாம்.
ஆண்களாக இருந்தால், வீட்டின் பூஜை அறையில் வைத்து விடலாம். கட்டிய பூவாக இருந்தால் அதையும் தலையில் வைத்துக் கொள்ளலாம். ஒருவேளை அதிகமான பூக்களை தருகிறார்கள் என்றால் கோவிலில் இருப்பவர்கள், அக்கம் பக்கத்தினருக்கு பகிர்ந்து கொடுக்கலாம். ஒருவேளை சுவாமிக்கு சாத்தப்பட்ட மாலையை பிரசாதமாக கொடுக்கிறார்கள் என்றால், அவற்றை கார், இரு சக்கர வாகனம் இருந்தால் அவற்றிற்கு அணிவிக்கலாம். மேலும், கோயிலில் கொடுத்த மாலையை வீட்டில் உள்ள சுவாமிக்கு அணிவிக்கக் கூடாது. இறைவனுக்கு ஒருமுறை சாத்தப்படும் அல்லது சமர்பிக்கப்படும் பொருட்களுக்கு நிர்மால்யம் என்று பெயர். அதாவது, அவை மீண்டும் இறை வழிபாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது என்று பொருள். அப்படி மீண்டும் வழிபாட்டிற்கு பயன்படுத்துவது மிகப் பெரிய பாவமாக பார்க்கப்படுகிறது.
வாகனங்களுக்கு அணிவிக்க முடியாதவர்கள் கோவிலில் தரும் மாலைகளை வீட்டில் உள்ள பூஜை அறையின் நிலை வாசலில் அல்லது வாசல் கதவின் நிலை வாசலில் மாட்டி வைக்கலாம். அவைகள் காய்ந்த பிறகு பூஜை அறை குப்பைகளுடன் சேர்த்து விடலாம். பூஜைக்கு பயன்படுத்த பூ இல்லை என்பவர்கள் பூக்கள் இல்லாமலும் பூஜை செய்யலாம். அப்படி இல்லையென்றால், வில்வ இலைகளை வாங்கி உலற வைத்து எடுத்துக் கொள்ளலாம். அவற்றை தண்ணீரில் சுத்தம் செய்து விட்டு, பூஜைக்கு பயன்படுத்தலாம். வில்வ இலை, நிர்மால்யம் கிடையாது. வில்வ இலையை மட்டும் எத்தனை முறை வேண்டுமானாலும் மீண்டும் மீண்டும் பூஜைக்கு பயன்படுத்தலாம். அதற்கு எந்த விதிமுறைகளும் கிடையாது. எத்தனை முறை பயன்படுத்தினாலும் அதன் தெய்வீக தன்மை குறையாது.
Read More : பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..? அதுவும் உணவுப் பின் அருமருந்தாம்..!!