முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மிஸ் பண்ணிடாதீங்க!… கோடி புண்ணியங்களை அள்ளித்தரும் நாள் இன்று!… கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்!

09:45 AM Dec 04, 2023 IST | 1newsnationuser3
Advertisement

கார்த்திகை மாதம் என்றாலே விசேஷங்கள் தான் அதிகம். தீப திருநாளன்று மட்டுமல்லாமல் இந்த மாதம் முழுவதுமே தினந்தோறும் காலையிலும், மாலையிலும் தீபமேற்றி வழிபட்டு, வீட்டின் நிலை வாசற்படியில் வைத்து வணங்குவது அத்தனை விசேஷமானது. இந்த மாதத்தின் திங்கட்கிழமைகளில் சிவவழிபாடு சகல புண்ணியங்களை சேர்க்கும் என்பது ஆன்மிக அன்பர்களின் வாக்கு. குறிப்பாக கார்த்திகை மாதத்தின் சோமவாரத்தில் அதாவது திங்கட்கிழமைகளில் சிவ ஆலயங்களில் நடைபெறும் சங்காபிஷேகம் கோடி புண்ணியங்களை அள்ளித்தரும். இந்த சங்காபிஷேகத்தை நேரில் காண்பவர்களுக்கும் வாழ்க்கை உயரும். இந்த நாளில் சந்திரனை வழிபடவும் உகந்தது.

Advertisement

இத்தகைய சிறப்பு வாய்ந்த சோம வாரத்தில் சிவ ஆலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும். 108, 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பி, தர்ப்பை கொண்டு அர்ச்சித்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வர். இதனை காண பிறவிப்பயனை அடையலாம். சங்கு என்பது மகாலட்சுமி அம்சம். இதனை கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்விப்பர். சிவபெருமானும் தங்கையான சங்கால் அபிஷேகம் செய்யும் போது மனம் குளிர்ந்து விடுவார். இந்த நேரத்தில் நம்முடைய வேண்டுதல்கள், பிரார்த்தனைகள் அனைத்தும் பலிக்கும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை.

சிவன் எப்படி சோமன் ஆனார் தெரியுமா? சோமன் என்று பெயர் சிவனுக்கு உரியது. சந்திரனை முடிசூடிக் கொண்டவர் சிவன். அப்படி சந்திரனை முடிசூடிக் கொண்ட சிவன், சேலத்தில் உள்ள ஶ்ரீ காவடி பழனியாண்டவர் ஆஸ்ரமத்தில் இருக்கிறார். சர்வலோக நாயகி சமேத சர்வ தோஷ நிவர்த்திஸ்வரர். இந்த பெயர் உலகத்தில் எந்த சிவனுக்கும் கிடையாது. இந்த ஆசிரமத்தில் உள்ள சர்வ தோஷ நிவர்த்திஸ்வரர் பீடத்தில் 12 ராசிகளை அமைத்து அதன் மேல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இவர் எமதர்மரின் திசையான தெற்கு திசையை நோக்கி வீற்றிருக்கிறார். இந்த சிவனை வழிபட்டால் எமபயம் நீங்கும். இதய சம்பந்தபட்ட நோய் உள்ளவர்கள் இவரை வழிபட்டால் விரைவில் குணமடைவார்கள் அதனால் அன்று சிவனை தரிசித்தால் சகல தோஷங்களும் நீங்கி சகல செல்வங்கள் கிடைக்கும் திருமணம் விரைவில் நடைபெறும் வழங்குகளில் வெற்றி வியாபாரம் அபிவிருத்தி அடைவார்கள். சிவனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வதால் ஏழு ஜென்ம பாவத்தையும் தீரும், 1000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும், 1000 பேருக்கு அன்னதானம் செய்த பலன் கிடைக்கும்.

கோடி தானம் செய்த பலன் கிடைக்கும். காசியில் குடியேறி வாழ்ந்த பலன் கிடைக்கும். பாடசாலைகள் அமைத்த பலன் கிடைக்கும்.வேள்விகள் செய்த பலன் கிடைக்கும். ஸ்வர்ண (தங்கம்) தானம் செய்த பலன் கிடைக்கும்.வில்வார்ச்சனை செய்வதால் கோடி புண்ணியம் கிடைக்கும்.வில்வார்ச்சனை செய்வதால் சிவலோகத்தை அடையும். மேலும் சங்காபிஷேகத்தில் கலந்து கொண்டு சிவபெருமானை பிரார்த்தனை செய்திட வீடு, மனை, குழந்தைப்பேறு, செல்வம் என சகல செல்வங்களும் வந்து சேரும்.

Tags :
என்னென்ன பலன்கள்?கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்
Advertisement
Next Article