For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’இந்த தவறை நீங்களும் செய்யாதீங்க’..!! இயற்கையான முறையிலும் உடல் எடையை குறைக்கலாம்..!! டிப்ஸ் இதோ..!!

11:41 AM Apr 26, 2024 IST | Chella
’இந்த தவறை நீங்களும் செய்யாதீங்க’     இயற்கையான முறையிலும் உடல் எடையை குறைக்கலாம்     டிப்ஸ் இதோ
Advertisement

உலகம் முழுவதுமே மாறி வரும் பழக்க வழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சியின்மை காரணமாக உடல் பருமன் பிரச்சனை அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதுமே 100 கோடி பேருக்கு அதிகமானோர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் கலோரி குறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு போன்றவற்றை பின்பற்றினால், உடல் எடையை உடனே குறைக்க முடியாவிட்டாலும், மாரடைப்பு அபாயத்தை குறைக்க முடியும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Advertisement

ஆனால், பலரும் உடல் எடையை உடனே குறைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்காக அறுவை சிகிச்சையும் செய்கிறார்கள். அதில் ஆபத்து ஏற்பட்டு மரணம் கூட ஏற்படுகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் சென்னையில் நடந்துள்ளது. புதுச்சேரியை சேர்ந்த ஹேமசந்திரன் என்பவர், உடல் எடையை குறைப்பதற்காக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். அவர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக இறந்ததாக மருத்துவர்கள் தெரிவத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பான விசாரணைகளும் நடைபெற்று வருகிறது.

இச்சம்பவம் தான் தற்போது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்யாமல், இயற்கையான முறையில் குறைப்பது தான் நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். உடல் எடை அதிகரிப்பு என்பது ஆண் பெண் என இருபாலருக்கும் இடையில் உள்ள ஒரு பொதுவான பிரச்சனையாகும். உடல் எடை அதிகரிக்க சரியான உறக்கம் இல்லாதது, தேவையில்லாத நேரத்தில் அதிகளவு உணவு சாப்பிடுவது, மன அழுத்தம், அதிகளவு மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற பல காரணங்களும் உடல் எடை அதிகரிக்கலாம்.

அதன்படி, இந்த 8 திட்டங்களை தொடர்ந்து பின்பற்றினால், உடல் பருமனில் இருந்து தப்பிக்கலாம். அவை என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

* சத்தான, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். துரித உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

* பசிக்கும்போது மட்டுமே சாப்பிட வேண்டும். ருசிக்காக அதிகமாக உண்பதால் உடல் அதை ஏற்க மறுத்து தேவையில்லாத கொழுப்புகள் உடலில் சேர்க்கிறது. இதைத் தவிர்க்க தேவையான அளவு உணவை பசிக்கும் போதெல்லாம் சாப்பிடுவது நல்லது.

* விரதம் இருப்பதால் உடலியல் மாற்றங்கள் சரிவர நிர்வகிக்க அமைப்புகளுக்கு சிறிது நேரம் ஓய்வு அளிக்கும். தன்னிலை மறந்து சரியாக இயங்காமல் இருந்த உறுப்புகள் புத்துணர்ச்சி பெறும்.

* தினசரி உணவில் பச்சை காய்கறிகள், தாவர வகை உணவுகளை சீரான முறையில் சேர்த்து உட்கொண்டு வந்தால், உடலில் தேவையில்லாமல் சேரும் கொழுப்பை குறைக்கலாம்.

* அதிக கொழுப்பில்லாத எண்ணெய்யை பயன்படுத்துவது நல்லது. செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய்யைப் பயன்படுத்துவது சிறந்தது.

* பழச்சாறுகளை காலையிலும், காய்கறிகள் வேகவைத்த சூப்களை மாலை வேளைகளிலும் பருகலாம். இது உடலுக்கு தேவைப்படும் சத்துகளை வழங்கி, தேவையில்லாதவற்றை சிறுநீர் வழியாக வெளியேற்றி விடும்.

* எப்போதும் கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும் உணவுகளை குறைவாக எடுத்துக் கொண்டு புரதம் அதிகமாக இருக்கும் உணவுகளை சாப்பிட முன்னுரிமை கொடுங்கள்.

* காலை உணவை தவிர்க்கக் கூடாது என்பதைத் தாண்டி, காலை உணவு சிறந்ததாக இருக்க வேண்டும். அதிகபடியான காரம், இனிப்பு, எண்ணெய், உப்பு இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இது நாள் முழுவதும் புத்துணர்ச்சியையும், உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புகளை தரும்.

Advertisement