’ரிலேஷன்ஷிப்பில் இந்த தவறை யாரும் பண்ணாதீங்க’..!! நடிகை கௌதமி அட்வைஸ்..!!
நடிகை கௌதமி சமீபத்தில் ஒரு பேட்டியில் ரிலேஷன்ஷிப் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக ஜொலித்த கௌதமியை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்துவிட முடியாது. ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், கார்த்திக் போன்ற முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்து பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். பிறகு சின்னத்திரையையும் விட்டு வைக்காமல் சில சீரியல்களிலும் நடித்தார். அதுபோல சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராகவும் கலந்து கொண்டிருந்தார். நடிகையாக மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகராகவும் இருக்கும் கௌதமி, சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
பேட்டியில் கௌதமியிடம் நீங்கள் உங்களுடைய மகள் மீது அதிகமான பாசத்தை வைத்திருக்கிறீர்கள். அவர் தானே உங்கள் பலம் என்று கேட்க, அதற்கு கௌதமி உண்மையில் யாரும் யாருக்கும் பலமாக கிடையாது. நீங்கள்தான் உங்களுடைய பலம். நீங்கள் மிகவும் சோகமாக இருக்கும்போது உங்களுக்கு பிடித்தவர்கள் அல்லது உங்களை மோட்டிவேட் செய்யக்கூடியவர்களின் வீடியோவை பார்ப்பீர்கள். இது நபருக்கு நபர் மாறுபடும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விஷயங்கள் உத்வேகத்தை தரும்.
ஆனால் உண்மையில் அது உங்களுடைய பலம் கிடையாது. நீங்கள்தான் உங்களுடைய பலம். நீங்கள் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்து அந்த ரிலேஷன்ஷிப் சரிவர ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால் நீங்கள் அதற்குரிய முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய அம்மா, அப்பா, கணவர், மகன், மகள், காதலர் என எந்த விதமான ரிலேஷன்ஷிப்பாக இருந்தாலும் அந்த ரிலேஷன்ஷிப்பில் இருவருக்கும் இடையே ஒரு மையப்புள்ளியானது கண்டிப்பாக இருக்கும். அந்த மையப் புள்ளி வரை இருவரும் வந்து நீ பாதி வேலையை செய் நான் பாதி வேலையை செய் என்று இருக்க வேண்டும்.
ஆனால், சில பேருக்கு ஏதோ ஒரு காரணத்தால் அந்த மையப் புள்ளிக்கும் அவருக்கும் இடையிலான இடைவெளி அதிகமாக இருக்கும். இங்கு நடக்கக்கூடிய தவறு என்னவென்றால், இன்னொரு பக்கம் இருக்கக்கூடிய அந்த குறிப்பிட்ட நபர் ஐயோ நீ இவ்வளவு தூரம் தான் கடந்து வந்திருக்கியா..? என்று கேட்டதும் அவர்களுக்காக எதிர்பக்கத்தில் இருப்பவர்கள் மையப் புள்ளியில் இருந்து இன்னும் கொஞ்ச தூரத்தை கடந்து அவர்கள் பக்கம் வருவார்கள். அப்படி போகும்போது எதிர் தரப்பில் இருப்பவர்களின் எதிர்பார்ப்புக்கு நம்மை பழக்கப்படுத்தி விடுகிறோம். அந்த சமயத்தில் அந்த பக்கத்தில் இருக்கும் நபர் நமக்காக இவ்வளவு தூரம் வந்திருக்கிறாரே, நமக்காக இவ்வளவு மெனக்கிடுகிறார்கள் என்று சொல்லி சந்தோஷப்படுவார்கள்.
ஆனால், நாம் இரண்டாவது முறை மூன்றாவது முறையே அப்படியே மெனக்கிடுவோம். காலப்போக்கில் அது எதிர் தரப்பில் இருப்பவர்களுக்கு பழக்கம் ஆகிவிடுகிறது. அப்படி இருக்கையில் எதிர் தரப்பில் இருப்பவர்கள் எப்போதுமே நமக்காக நம் பக்கத்தில் வர நினைக்க மாட்டார். அவர் நான் எதற்காக உன் பக்கத்தில் வரவேண்டும். நீ தான் இண்ணமும் கஷ்டப்பட்டு என் பக்கத்தில் வரவேண்டும் என்று நம் மீது மொத்த சுமையும் கட்டிவிடுவார்கள். இதை நான் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பாடமாக கற்று இருக்கிறேன். ஆகையால் அது எந்தவிதமான ரிலேஷன்ஷிப்பாக இருந்தாலும் சரி நீங்கள் அந்த மையப் புள்ளியை தாண்டக்கூடாது” என்றார்.
Read More : ஒரு மணி நேர தூக்கத்தை இழந்தால் உங்களுக்கு இந்த பிரச்சனைகள் வரும்..!! எச்சரிக்கும் நிபுணர்கள்..!!