முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்த தவறை மட்டும் யாரும் பண்ணிடாதீங்க..!! வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்..!! சென்னை மக்களே கவனம்..!!

10:26 AM Nov 07, 2023 IST | 1newsnationuser6
Advertisement

நீர்நிலைகளில் யாரும் குப்பைகளை தயவு செய்து கொட்ட வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

வடகிழக்கு பருவமழை சென்னையில் தொடங்கிவிட்ட நிலையில், மழை காலங்களில் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, வெள்ளம் ஊருக்குள் புகுவதை தடுக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னையின் ஆற்றின் கரையோரங்கள், கால்வாய்களில் உள்ள குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "நாம் இப்போது பார்த்து கொண்டிருப்பது அரும்பாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதி. இந்த கால்வாய் விருகம்பாக்கம் நீர்வளத்துறையின் மூலம் பராமரிக்கப்படும் கால்வாய் ஆகும். 6.6 மீட்டர் நீளமுள்ள இந்த கால்வாயில் இவ்வளவு குப்பைகள் கொட்டப்பட்டிருக்கிறது. ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் இருக்கிறது. ஏற்கனவே கழிவுகளை அகற்றினோம். ஆனால், இப்போது இவ்வளவு பிளாஸ்டிக் கழிவுகள் நிற்கிறது. குப்பை போடுறவங்க தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். குப்பைகளை கொட்டினால் கால்வாய் அடைத்து கொள்ளும்.

3 நாட்களுக்கு ஒரே நேரத்தில் கால்வாய்களை தூர்வாரினாலும், மக்கள் அதிகளவில் கழிவுகளை கொட்டுவதால், அடைப்பு ஏற்படுகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். ஹெல்மெட், பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் கால்வாயில் இருக்கிறது. சென்னை மாநகராட்சியால் 33 மைக்ரோ கால்வாய்களும், விருகம்பாக்கம் கால்வாய் உட்பட 14 நீர்வளத்துறை மூலமும் பராமரிக்கப்பட்டு வருகிறது. குப்பைகளை அகற்றினாலும், மீண்டும் குப்பை போடுவதால் தான் தண்ணீர் தேங்குகிறது. தயவு செய்து பொதுமக்களே நீர் வழித்தட கால்வாய்களில் குப்பைகளை போடாதீர்கள்" இவ்வாறு கூறினார்.

Tags :
சென்னைபிளாஸ்டிக்ராதாகிருஷ்ணன்
Advertisement
Next Article