முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

எழுத்துகள் தெரியவில்லையா?. இனி கண்ணாடி தேவை இல்லை!. புதிய கண் சொட்டு மருந்துக்கு ஒப்புதல்!.

New eye drops that could eliminate the need for glasses approved in India
05:47 AM Sep 04, 2024 IST | Kokila
Advertisement

PresVu: ரீடிங் கிளாஸை அகற்ற உதவும் புதிய கண் சொட்டு மருந்துகள் இந்தியாவின் மருந்து ஒழுங்குமுறை நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

Advertisement

நம் கருவிழி, தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளும் இயல்பை இழந்து வருவதாகும். இதனால், ஒளியைப் பார்க்கும்போது விழித்திரையில் சரியாக கவனம் குவியாது. எனவே அருகில் உள்ள பொருட்கள் மங்கலாக தெரியும். தற்போதைக்கு இந்த பிரச்னைக்கு மூக்கு கண்ணாடி அணிவது, அறுவை சிகிச்சை செய்வது போன்றவையே தீர்வாக உள்ளன.

ஆண்டுக்கு ஒருமுறை கண் பார்வை திறனை பரிசோதித்து, தேவைப்பட்டால் கண்ணாடியை மாற்ற வேண்டியிருக்கும். தற்போது இந்த பிரச்னைக்கு, ஒரு கண் சொட்டு மருந்து வாயிலாக தீர்வு கிடைக்க உள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாக வைத்து செயல்படும் 'என்டோட் பார்மசூட்டிகல்ஸ்' என்ற மருந்து நிறுவனம், 'பிரஸ் வியூ' என்ற கண் சொட்டு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இது, 40 முதல் 55 வயதுக்குட்பட்ட வெள்ளெழுத்து பிரச்னை உள்ளவர்களுக்கு நிரந்தர தீர்வை அளிக்கும் என, அந்த நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டு கால ஆராய்ச்சிகளுக்குப் பின், இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளோம். ஒப்புதல் கிடைத்ததும், அடுத்த மாதத்தில் இருந்து இது விற்பனைக்கு வரும். இது, 350 ரூபாய்க்கு மருந்து கடைகளில் கிடைக்கும். டாக்டர்களின் பரிந்துரை அடிப்படையில் வாங்கி பயன்படுத்தலாம். இந்த சொட்டு மருந்து, கருவிழியின் அளவைக் குறைக்கும்.

இதன் வாயிலாக, மிகவும் நெருக்கத்தில் உள்ள பொருட்களை கூட தெளிவாக பார்க்க முடியும். முதல் சொட்டு மருந்து செலுத்திய, 15 நிமிடங்களுக்குள் அதன் செயல் திறனை உணர முடியும். இது, ஆறு மணி நேரத்துக்கு சிறப்பாக செயல்படும். முதல் சொட்டு மருந்து செலுத்திய, 3 - 6 மணி நேரத்துக்குள் அடுத்த துளியை செலுத்தும்போது, அதன் செயல் திறன் மேலும் அதிகரிக்கும்.

Readmore: மாநிலம் தழுவிய ஸ்டிரைக்… நாளை தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் இயங்குமா…?

Tags :
approvedNew eye dropsPresVuReading class
Advertisement
Next Article