முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்த பழக்கத்தை மட்டும் வெச்சிக்காதீங்க..!! காத்திருக்கும் ஆபத்து..!! மக்களே எச்சரிக்கை..!!

In this post we will see about 8 things that affect our health life.
05:30 AM Jul 17, 2024 IST | Chella
Advertisement

நாம் அனைவரும் ஆரோக்கியத்திற்காக பல சுகாதார விஷயங்களை மேற்கொள்வோம். அது காலையில் பல் துலக்குவது முதல் இரவு குளிப்பது வரை ஆரோக்கியத்தை பேன பல விஷயங்களை கடைப்பிடிப்போம். அப்படி நாம் தினசரி நல்லது என நினைத்து செய்யக்கூடிய சில விஷயங்கள் நமக்கு தீங்கு விளைவிக்கும். ஆம், நம் ஆரோக்கிய வாழ்வை பாதிக்கும் 8 விஷயங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement

சாப்பிட்டதும் தூங்கச் செல்வது :

நம்மில் சிலருக்கு இரவு உணவு சாப்பிட்டவுடன் உறங்கச் செல்லும் பழக்கம் இருக்கும். இந்த பழக்கம் ஆரோக்கியத்திற்கு நல்லது இல்லை. சாப்பிட்டவுடன் உறங்க செல்வது உங்கள் செரிமான செயல்பாட்டை பாதிப்பதோடு, கொலஸ்ட்ரால் தேக்கத்திற்கு வழிவகுத்து தொப்பை உண்டாவதற்கு காரணமாக மாறுகிறது.

அதிக நேரம் ஹெட் செட் பயன்படுத்துவது : 

நம்மில் சிலருக்கு அதிகமாக பாட்டு கேக்கும் பழக்கம் இருக்கும். பாட்டு கேப்பது நல்லது தான். ஆனால், ஹெட்செட் அதிகமாக உபயோகிப்பது நல்லது அல்ல. ஹெட் செட் மூலம் அதிக நேரம் பாட்டு கேட்பதால், உங்கள் காதுகளின் சவ்வு பாதிக்கக் கூடும். அதேநேரம், காது நரம்புகளின் தொற்றுக்கும் வழிவகுத்து, காது மற்றும் வாய் வலிக்கு காரணமாக அமையும்.

தூங்க செல்ல முன் உடற்பயிற்சி : 

நம்மில் சிலர் நேரமின்மை காரணமாக இரவு தூங்கச் செல்வதற்கு முன் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளோம். இவ்வாறு செய்வது உடல் மொலிவுறுதல் பிரச்சனைக்கு வழிவகுக்கலாம். அதுமட்டும் அல்ல, செரிமானப் பிரச்சனைக்கு வழிவகுக்கும்.

குப்புறப் படுப்பது : 

நம்மில் பலருக்கும் இருக்கும் பழக்கங்களில் ஒன்று. தலைகுப்புற படுப்பது. இரவு தூங்கும் போது தரையை பார்த்து படுப்பதால், கழுத்து எலும்புகளின் அழுத்தம் அதிகரிக்கும். இதன் விளைவாக கழுத்து வலி, முதுகு வலி மற்றும் சதை பிடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

நீண்ட நேரம் பல் துலக்குவது : 

நீண்ட நேரம் பல்துலக்குவதால், பற்பசையில் உள்ள வேதிப்பொருட்கள் பல்லின் எனாமல் சிதைவுக்கு வழிவகுக்கும். அதே போன்று அளவுக்கு அதிகமாக பற்பசை பயன்படுத்தினாலும் பல் எனாமலை பாதிக்கும். மிளகு அளவிற்கு மட்டுமே பற்பசையை உபயோகிக்க வேண்டும்.

டீ-க்கு பின் தண்ணீர் குடிப்பது : 

பலருக்கும் இருக்கும் பழக்கங்களில் ஒன்று, தேநீருக்கு பின் தண்ணீர் குடிப்பது. சூடான பால், தேநீர், காஃபி போன்றவற்றை பருகியவுடன் குளிர்ந்த நீரை குடிப்பது நல்லது அல்ல. இவ்வாறு செய்வதால், வயிற்று உபாதைக்கு வழிவகுக்கும்.

சொடுக்கு போடுவது :

கை விரல்களில் அடிக்கடி சிலர் சொடுக்கு போடுவது உண்டு. இவ்வாறு அடிக்கடி சொடுக்குப் போடுவது நரம்புத் தளர்ச்சி உள்ளிட்ட நரம்பியல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

எச்சில் தொட்டு பணம் எண்ணுவது :

ரூபாய் நோட்டுகள் எண்ணும் போதும், புத்தகங்களை திருப்பும் போதும் சிலர் ‘விரல்களில் எச்சிலை தொட்டு’ எண்ணுவோம் அல்லது திருப்புவோம். இவ்வாறு எச்சிலை தொட்டு காகிதங்களை திருப்புவது கிருமி தொற்றுக்கு வழிவகுக்கும். நுரையீரல் பாதிப்பு கூட ஏற்படலாம். எனவே, இந்த பழக்கத்தை முற்றிலும் கைவிட்டுவிடுங்கள்.

Read More : பெற்றோர்களே உஷார்..!! கோமா, உயிரிழப்பை ஏற்படுத்தும் ’சந்திபுரா’ வைரஸ்..!! 6 குழந்தைகள் பலி..!!

Tags :
healthhealth benefitshealthyhealthy foodhealthy habitshealthy lifeHealthy lifestylehealthy tipshome health tips
Advertisement
Next Article