அடடே இது சூப்பர்.! வீட்டில் மாடு இல்லை என்று கவலையா.? மாட்டுப் பொங்கலை இப்படி கொண்டாடுங்க.!
பொங்கல் பண்டிகை தமிழர்களின் பாரம்பரிய மற்றும் கலாச்சார பண்டிகைகளில் ஒன்றாகும். இந்தப் பண்டிகையின் போது மக்கள் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி சர்க்கரைப் பொங்கல் வெண் பொங்கல் மற்றும் பால் பொங்கல் வைத்து வழிபடுவார்கள். பொங்கல் பண்டிகையின் முதல் நாளான இன்று போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இதில் மலையின் கடவுளாக கருதப்படும் இந்திரனை வழிபடுவார்கள். இதனைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகை தினத்தன்று சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் பயன்படும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த மாட்டுப்பொங்கல் கிராமங்களில் வெறும் விமர்சையாக கொண்டாடப்படும். விவசாயிகள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் மாடுகளைக் குளிப்பாட்டி அவற்றை அழகுப்படுத்தி கொம்புகளில் வண்ணம் தீட்டி மாலை அணிவித்து மாடுகளுக்கு பொங்கல் படைத்து வழிபடுவார்கள். மேலும் பசு மாடுகளுக்கு கற்பூர ஆராதனை செய்து வழிபடுவதோடு அவற்றிடம் வேண்டிக் கொள்வார்கள்.
மாடு வைத்திருப்போர்களுக்கு தான் மாட்டுப்பொங்கல் என்ற தவறான நினைப்பு அனேக மக்களிடம் இருக்கிறது. மாடு இல்லாதவர்களும் மாட்டுப் பொங்கல் கொண்டாடலாம் என ஆன்மீகப் பெரியவர்கள் தெரிவிக்கின்றனர். மாட்டுப் பொங்கல் தினத்தன்று மாடுகள் இல்லாதவர்கள் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு படையல் இட்டு அவர்களிடம் வேண்டிக் கொள்ளலாம். மேலும் வசதி படைத்தவர்கள் முன்னோர்களின் ஞாபகமாக புத்தாடைகள் வாங்கி அதை முன்னோர்களுக்கு படைத்துவிட்டு பின்னர் தானமாக பிறருக்கு கொடுக்கலாம்.
மேலும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று வீடுகளுக்கு அருகே கோசலை கோவிலில் இருந்தால் அங்கு சென்று வழிபடலாம். மாடுகளுக்கு பிடித்த உணவுகளை வாங்கி கொடுக்கலாம். வீட்டின் அருகே கோசலை கோயில் இல்லாதவர்கள் சிவன் கோவில் சென்று நந்தியை தரிசித்து தீபம் ஏற்றி வேண்டி வரலாம். மாடுகள் இல்லாதவர்கள் இவ்வாறு மாட்டுப்பொங்கலை கொண்டாடலாம்.