கவனம்... இந்த பொருள்களை அரைத்தால், மிக்ஸி சீக்கிரம் பழுதாகிவிடும்!!!
மனிதனின் தேவைகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டு வருகிறது. அந்த வகையில் அன்றாட வாழ்வில் மிக முக்கியமான தேவையாக மாறியுள்ளது தான் மிக்ஸி. கிச்சனில் மிக்ஸி வேலை செய்யவில்லை என்றால், ஒரு கையே வேலை செய்யாதது போல் ஆகிவிடுகிறது பல இல்லத்தரசிகளுக்கு. இத்தனை முக்கியமான பங்கு வகிக்கும் மிக்ஸியில் இருக்கும் ஒரே பிரச்சனை அடிக்கடி மிக்ஸி பழுதாகிவிடும். இதற்க்கு முக்கிய காரணம் நாம் எந்த பொருளை மிக்ஸியில் அரைக்கிறோம் என்று பல நேரங்களில் நாம் யோசிப்பது இல்லை. ஆம், மிக்ஸி சீக்கிரம் பழுதாகாமல் இருக்க ஒரு சில பொருள்களை நாம் மிக்ஸியில் அரைக்க கூடாது. மிக்ஸியில் அரைக்க கூடாத பொருள்கள் என்ன என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.....
சூடான பொருள்கள்: அவசரமான காலை நேரத்தில், நாம் வதக்கி வைத்திருக்கு பொருளை ஆற வைப்பதற்கு நேரம் இல்லாமல், சூடாக இருக்கும் பொருள்களை வைத்து சட்னி அரைத்து விடுவோம். நாம் இப்படி செய்வதால் சூடான பொருளிலிருந்து வெளியேறும் நீராவி ஜாடிக்குள் அழுத்தத்தை ஏற்படுத்திவிடும். இதனால் மிக்ஸி பழுதாகிவிடும். மேலும், இப்படியே தொடர்ந்து செய்து வந்தால் மற்ற பொருட்களை அரைக்கும் போது அவை மிக்ஸியில் இருந்து தானாகவே வெளியேறும். அது மட்டும் இல்லாமல், இப்படி செய்வதால் ஜாடிக்குள் அழுத்தம் உருவாகி சமயங்களில் மிக்ஸி வெடிக்க வாய்ப்பு உண்டு.
குளிர்ந்த பொருள்கள்: நம்மில் பலர் ஜூஸ், ஷேக்ஸ், கோல்ட் காபி ஆகியவை தயாரிக்க மிக்ஸியை பயன்படுத்துகிறோம். அப்போது நாம் முழு ஐஸ் கட்டியை மிக்ஸியில் போட்டு அரைத்து விடுகிறோம். இப்படி செய்வதால் மிக்ஸி பிளேடு உடைய வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும், இது மோட்டரையும் பலவீனப்படுத்திவிடும்.
மாவுச்சத்து உள்ள பொருள்கள்: உருளைக்கிழங்கு, அரிசி போன்ற மாவுச்சத்து உள்ள பொருட்களை மிக்ஸியில் அரைக்கும் போது, அதிகப்படியான மாவுச்சத்து வெளியாகும். இதனால் அவற்றில் திரவம் கலந்து, அதை மென்மையாக மாறுவதற்கு பதிலாக பசை போல் ஆகிவிடும். இதனால் மிக்ஸி பிளேடுகள் சீக்கிரம் பழுதாகிவிடும்.
கடினமான பொருள்கள்: சுக்கு, மஞ்சள், தேங்காய் துண்டுகள் போன்ற கடினமான பொருள்களை மிக்ஸியில் நேரடியாக அரைக்கவே கூடாது. இதனால் மிக்ஸியின் பிளேடு சீக்கிரம் பழுதாகிவிடும். இப்படி நேரடியாக அரைப்பதற்கு பதிலாக உரலில் சிறிது இடித்து விட்டு மிக்ஸியில் போட்டு அரைக்கலாம்.
Read more: அலுமினிய ஃபாயிலில் பேக் செய்த உணவை சாப்பிடுவதால் வரும் பெரும் ஆபத்து!!! எச்சரிக்கும் மருத்துவர்கள்.